பிஜேபிக்கு ஏன் ஓட்டுப்போட்டே? கணவன் சொன்ன தலாக்?.. போலீஸுக்கு போன மனைவி.. பரபரக்குது மத்திய பிரதேசம்
போபால்: பாஜகவுக்கு ஓட்டுப்போட்டதற்காக கணவன் தன்னை விவாகரத்து செய்துவிட்டதாக, பெண் ஒருவர் போலீஸுக்கு சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் வசித்துவருகிறார் 26 வயதான முஸ்லிம் பெண்.. இவர் போலீசில் புகார் ஒன்றை தந்துள்ளார்.. அந்த புகாரில் உள்ளதாவது:

மாமியார்: எனக்கு 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. நானும், என் கணவரும் சில காலம் சந்தோஷமாக இருந்தோம்.. அதற்கு பிறகு, குடும்பத்தில் வரதட்சணை பிரச்சனை வெடித்தது.. என்னுடைய கணவர், மாமியார் மற்றும் கணவரின் சகோதரிகள், வரதட்சணை கேட்டு என்னை அடித்து துன்புறுத்த ஆரம்பித்தார்கள்.
ஒருகட்டத்தில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, என்னை வீட்டை விட்டும் வெளியேற்றினார்கள்.. எனவே, என்னுடைய கணவருடன் வாடகை அறையில் தங்கினேன்... அந்த நேரத்தில்தான், லோக்சபா தேர்தல் நடைபெற்றது.. அப்போது பாஜகவுக்கு நான் ஓட்டளித்தேன்.. இதனால், என் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் என் மீது கூடுதலாக ஆத்திரம் அடைந்தனர்.
விவாகரத்து: இதையே காரணமாக சொல்லி, என் கணவர் முத்தலாக் சொல்லி எனக்கு விவாகரத்து அளித்துவிட்டார்.. எனவே, கணவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் அப்பெண் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த புகாரின்பேரில் போலீசாரும், அந்த பெண்ணின் கணவர், மாமியார் மற்றும் கணவரின் 4 சகோதரிகள் மீது வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் தற்போது வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்..
கணவர் விளக்கம்: ஆனால், இந்த பெண்ணின் குற்றச்சாட்டை, அவரது கணவர் மறுக்கிறார்.. பாஜகவுக்கு ஓட்டுப்போட்டதால் மனைவிக்கு விவாகரத்து தரவில்லை என்றும் சொல்கிறார்.
இதுகுறித்து கணவர் சொல்லும்போது, "நான் ஒன்றும் உடனடியாக முத்தலாக் தரவில்லை.. கடநத 2022 மார்ச் 30ம் தேதிதான், முதல் தலாக் அளிக்கப்பட்டது. அதன்பிறகு, 2023 அக்டோபர், நவம்பர் மாதங்களில் அடுத்தடுத்து 2 முறை தலாக் சொன்னேன்.. இந்த காலகட்டங்களில் எந்த தேர்தலுமே அப்போது நடக்கவில்லை..
தலாக் : என் மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்தது.. அந்த கள்ள உறவை துண்டித்து கொள்ளும்படி பலமுறை எடுத்து சொன்னேன்.. பலமுறை மனைவியை கண்டித்தேன்.. ஆனாலும் அவர் திருந்துவதாக இல்லை.. அதனால்தான், முத்தலாக் அளித்தேன்" என்று கூறுகிறார்.
ஆனால், இதில் யார் சொல்வது உண்மை என்று தெரியவில்லை.. முத்தலாக் தடை சட்டம் ஏற்கனவே அமலில் உள்ள நிலையில், இப்போது இந்த பெண் அளித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
-
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக்












Click it and Unblock the Notifications