காஷ்மீரின் அனந்தாக்கில் 33% வாக்குப் பதிவு- பல இடங்களில் பதற்றம்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் லோக்சபா தொகுதியில் வாக்குப் பதிவு மந்தமாக இருந்து வருகிறது. மாலைவரை 33% வாக்குகளே பதிவாகி இருந்தன.
ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் தொகுதியில் காலையிலேயே வாக்குப் பதிவு தொடங்கிய போதும் மாலை வரை மந்தமான நிலைமையே இருந்தது. இங்கு 12 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

இத்தொகுதியில் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சியின் மெகபூப் பெக் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மெகபூபா முப்தி ஆகியோர் மோதினர்.
அனந்தநாக் தொகுதிக்குட்பட்ட சோபியான், புல்வானா ஆகிய இடங்களில் போலீசாருக்கும் வாக்காளர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்றது. புல்வானாவில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதைத் தொடர்ந்து அங்கு வாக்குப் பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. மாலையில் அனந்தநாக்கில் 33% வாக்குகளே பதிவாகி இருந்தன.












Click it and Unblock the Notifications