மோடி பதவியேற்பு: டெல்லி வந்த ஷெரீப், ராஜபக்சே, கர்சாய், ஷெரிங்: யாமீனும் வந்துவிட்டார்
டெல்லி: நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப், இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்கள் டெல்லிக்கு வந்துள்ளனர்.
நரேந்திர மோடி இன்று மாலை பிரதமராக பதவியேற்கிறார். இந்த விழாவில் கலந்து கொள்ள வருமாறு சார்க் நாடுகளின் தலைவர்களான பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் ராஜபக்சே, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பூட்டான் பிரதமர் ஷெரிங் தோப்ஹய், மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கயூம், நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா, ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
Pak PM Nawaz Sharif is accompanied by his wife Kulsoom Nawaz and son Hussain Nawaz. #PMModi pic.twitter.com/8Db81Zbqxu
— CNN-IBN News (@ibnlive) May 26, 2014
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>மோடியின் அழைப்பை ஏற்று சார்க் நாடுகளின் தலைவர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார்கள். இதில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஜப்பான் செல்வதால் அவரது சார்பில் சபாநாயகர் ஷிரின் ஷர்மின் சவுத்ரி விழாவில் பங்கேற்கிறார்.
Hamid Karzai arrives in New Delhi for Modi's swearing-in. Track LIVE updates http://t.co/c0KWy3gh3K #Elections2014 pic.twitter.com/BUYFnF4bK4
— NDTV (@ndtv) May 26, 2014
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>விழாவில் பங்கேற்க நவாஸ் ஷெரீப், ராஜபக்சே, ஹமீது கர்சாய், ஷெரிங் தோப்ஹய், சுஷில் கொய்ராலா, ஷிரின் ஷர்மின் சவுத்ரி ஆகியோர் டெல்லிக்கு வந்துவிட்டனர். சார்க் நாடுகளின் தலைவர்கள் தவிர மொரிஷீயஸ் பிரதமர் நவின் ராம்கூலமும் விழாவில் கலந்து கொள்ள இன்று காலை டெல்லி வந்துள்ளார். நவாஸ் ஷெரீப் இன்று காலை டெல்லி வந்தார். முன்னதாக பாகிஸ்தானில் இருந்து 14 பேர் கொண்ட குழு நேற்று டெல்லிக்கு வந்துவிட்டது.
இந்நிலையில் மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கயூம் இன்று பிற்பகல் 1 மணிக்கு மேல் டெல்லி வந்தார்.
Maldives President Abdulla Yameen arrives in Delhi to attend PM-designate Narendra Modi's swearing-in ceremony pic.twitter.com/Byf8Ohp3U7
— ANI (@ANI_news) May 26, 2014
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>மோடியின் பதவியேற்பு விழாவில் 1,000 முக்கிய பிரமுகர்கள், வெளிநாட்டு தூதர்கள் 150 பேர், 1,200 உயர் அதிகாரிகள், நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள் 777 பேர், புதிய அமைச்சர்களின் குடும்பத்தினர், மோடியின் தனிப்பட்ட விருந்தினர்கள் 20 பேர், ஊடகத்தினர் என மொத்தம் 4 ஆயிரம் பேர் கலந்து கொள்கிறார்கள். இதையடுத்து விழாவுக்கு வரலாறு காணாத அளவுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Click it and Unblock the Notifications