கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள்...வேடிக்கை ஆரம்பித்துவிட்டது என்கிறார் கீர்த்தி ஆசாத் !
டெல்லி: எனது அடுத்த நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள் பாஜகவிற்கு வேடிக்கை ஆரம்பித்துவிட்டது என்று அக்கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீர்த்தி ஆசாத் தெரிவித்துள்ளார்.
டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடுகள் தொடர்பாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மீது ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக அவர் பதவி விலகக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஆம்ஆத்மியினர் ஈடுபட்டு வருகின்றனர்.. ஆம்ஆத்மி கட்சியினர் ஒருபுறம் புகார் தெரிவிக்க, மறுபுறம் சொந்த கட்சியைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கீர்த்தி ஆசாத்தும் அருண் ஜேட்லிக்கு எதிராக பல்வேறு புகார்களை அடுக்கியிருந்தார்.

இதனால் கீர்த்தி ஆசாத் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்படுவதாக பா.ஜ.க. தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா வெளியிட்டார். கட்சியின் கொள்கைகளை மீறி செயல்பட்டதற்காகவும், அருண் ஜேட்லியை தாக்கி எதிராக பேசியதற்காகவும் கட்சியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கீர்த்தி ஆசாத் கூறுகையில், என்னுடைய அடுத்த நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள். என்னை நீக்கியது பாஜக-வுக்கு துரதிர்ஷ்டம் தான். கட்சி நடவடிக்கைகளுக்கு எதிராக நான் எங்கு செயல்பட்டேன்?.,யாரையும் நான் தனிப்பட்ட முறையில் சாடவில்லை. நான் எழுப்பிய பிரச்னை மிகப் பழமையானது. கடந்த 9 ஆண்டுகளாக இந்த பிரச்சினைக்காக நான் குரல் கொடுத்து வருகிறேன். நான் கட்சிக்கு விரோதமாக என்னென்ன நடவடிக்கைகளில் ஈடுபட்டேன் என்பதை பாஜக விளக்க வேண்டும். எனக்கு யார் மீதும் தனிப்பட்ட விரோதம் இல்லை என்றார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications