For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏழைகளின் இலவச ஆபரேஷனுக்காக பெங்களூரில் 18ம் தேதி நடக்கும் வாக்கத்தான்

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூரு: ஏழைகளின் அறுவை சிகிச்சைக்கு நிதி திரட்டும் வகையில் வரும் 18ம் தேதி வாக்கத்தானுக்கு ஏற்பாடு செய்துள்ளது பெங்களூரை சேர்ந்த பிரபல மருத்துவமனையான பீபிள் ட்ரீ பவுன்டேஷன்.

பெங்களூரில் உள்ள பிரபல மருத்துவமனை பீபிள் ட்ரீ பவுன்டேஷன். அது ஏழைகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய நிதி திரட்டும் வகையில் பெங்களூரில் வரும் 18ம் தேதி வாக்கத்தானை(Walkathon) நடத்துகிறது.

Walkathon to fund free surgeries for the disenfranchised in Bengaluru

மேலும் வரும் 18ம் தேதி பெங்களூரில் உள்ள சவுதய்யா நினைவு அரங்கில் பிரபல வயலின் வித்வான் அனீஷ் வித்யாசங்கரின் கச்சேரிக்கும் ஏற்பாடு செய்துள்ளது. தாராள மனமுள்ளவர்கள் நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை வாங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். டிக்கெட்டுகள் ரூ.1000, ரூ.2,500 மற்றும் ரூ.5,000க்கு அளிக்கப்படுகிறது.

300 ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று மருத்துவமனை இந்த ஆண்டின் துவக்கத்தில் தெரிவித்திருந்தது. பீபிள் ட்ரீ பவுன்டேஷன் கடந்த 2 ஆண்டுகளில் 160 அறுவை சிகிச்சைகளை செய்துள்ளது. மேலும் கிராமப்புற பகுதிகளில் 50 சுகாதார முகாம்களை அமைத்துள்ளது.

இது தவிர 40 மாணவர்களுக்கு துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி படிப்பும் அளித்துள்ளது. இது குறித்து மேலும் விபரம் அறிய 09900027280, 09886707070, 09845853344 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் அல்லது [email protected] என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பலாம்.

English summary
People Tree Foundation, a renowned hospital in Bengaluru, is organising a fund raiser to help patients from economically weaker sections of the society. A walkathon planned on December 18 hopes to draw donors to fund free surgeries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X