கதறடிக்கும் "வான்னாகிரை" வைரஸ்.. 99 நாடுகள் பாதிப்பு.. இந்தியாவிலும் பரவியது! #WannaCry
டெல்லி: உலகம் முழுவதும் புதிய வைரஸ் தாக்குதல் கம்ப்யூட்டர்களைப் பதம் பார்த்து வருகிறது. வான்னாகிரை வைரஸ் என்ற இந்த வைரஸை, ஹேக்கர்கள் ஏவியுள்ளனர். பணம் பறிக்கும் நோக்கில் இந்த வைரஸை இந்தக் கும்பல் ஏவியுள்ளது. இந்த வைரஸால் உலகம் முழுவதும் 99 நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன.
படு வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் தாக்குதலிலிருந்து தப்ப முழுமையான பாதுகாப்பு இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இன்டர்நெட் இணைப்பிலிருந்து கம்ப்யூட்டரை பிரித்து வைப்பது மட்டுமே இப்போதைக்கு ஒரே தீர்வு என்கிறார்கள்.
ஃபயர்வால் மற்றும் ஆன்டி வைரஸ் என எந்தத் தற்காப்பும் கை கொடுக்கவில்லையாம். அதைத் தாண்டி இந்த வைரஸ் படு வேகமாக பரவி வருகிறதாம்.

ஹேக்கர்கள் அட்டகாசம்
ஹேக்கர் கும்பலின் கைவரிசைதான் இந்த வைரஸ். இந்த வைரஸ் தாக்கும் கம்ப்யூட்டர்கள் லாக் ஆகி விடும். இதைத் தொடர்ந்து வைரஸை அனுப்பிய ஹேக்கர் கும்பல், அன்லாக் செய்ய உதவுகிறோம். பணம் கொடுங்க என்று மிரட்டி பண் பறிக்கிறார்களாம்.

வெள்ளிக்கிழமை முதல் பரவுகிறது
கடந்த வெள்ளிக்கிழமை முதல் இந்த மிரட்டல் வைரஸ் பரவி வருகிறது. முதலில் இந்த வைரஸ் பரவலை கண்டுபிடித்துக் கூறியது ஆன்டிவைரஸ் நிறுவனமான அவஸ்த்தான். எடுத்த எடுப்பிலேயே இந்த வைரஸ் உலக அளவில் 75,000 கம்ப்யூட்டர்களை லாக் செய்து விட்டது. தற்போது லட்சத்திற்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களை இது லாக் செய்துள்ளது.

பேரைப் பாருங்க
இந்த வைரஸுக்கு பெயர் வானாகிரிப்டோஆர் 2.0 அல்லது வானாகிரை என்பதாகும். இங்கிலாந்து, ஸ்பெயின் நாடுகளைத்தான் இது கடுமையாக பாதித்துள்ளது. மேலும் பல நாடுகளையும் இது தொடர்ந்து தாக்கி வருகிறது. 99 நாடுகள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவிலும் தாக்குதல்
இந்தியாவிலும் கூட இந்த வானாகிரை வைரஸ் பரவியுள்ளது. ஆந்திர மாநில காவல்துறையின் கம்ப்யூட்டர்களை இது தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் வங்கி நெட்வொர்க்கை குறி வைத்துத்தான் இந்த வைரஸ் பரவி வருகிறது என்பதால் ஏடிஎம் சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. ஆன்லைன் சேவைகளும் கடும் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புகள உள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications