பெங்களூரில் பெட்ரோல் போட எமிஷன் டெஸ்ட் சான்றிதழ் கட்டாயமாகிறது!
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: வாயு மாசுவை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், எமிசன் டெஸ்ட் சான்றிதழ் காண்பிக்காத வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் அளிக்க கூடாது என்ற உத்தரவை பெங்களூருவில் அமல்படுத்த உள்ளனர்.
பூங்கா நகரமான பெங்களூரு சமீபகாலமாக வாயு மாசு பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறது. மாசுவை கட்டுப்படுத்த கோரி, ஹைகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில், அரசுக்கு விளக்கம் கேட்டு ஹைகோர்ட் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

ஹைகோர்ட் நோட்டீசுக்கு பதிலளித்துள்ள மாநில அரசு, பெங்களூருவிலுள்ள பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் நிரப்ப, எமிசன் டெஸ்ட் சான்றிதழ் கட்டாயம் என்ற விதிமுறையை விரைவில் கொண்டுவர உள்ளதாக கூறியுள்ளது.
இதற்கான வரைவு உணவு வழங்கல்துறையால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அரசு இந்த அறிவிப்பை நோட்டிபை செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications