மோடி பிரதமராவதை நான் பார்க்க வேண்டும்... லதா மங்கேஷ்கர் பேச்சு
புனே: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமர் பதவிக்கு வர வேண்டும். அதை நான் பார்க்க ஆவலாக உள்ளேன் என்று பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கூறியுள்ளார்.
புனேவில் 600 படுக்கைகளுடன் கூடிய தீனானாத் மங்கேஷ்கர் சூப்பர்ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறப்பு விழா நடந்தது.
இதில் மோடி கலந்து கொண்டார். தீனானாத், லதா மங்கேஷ்கரின் தந்தை ஆவார்.

மோடி விரும்புவது கிடைக்கட்டும்
அப்போது விழாவில் லதா பேசுகையில், இன்று தீபாவளித் திருநாள். இந்த நல்ல நாளில், மோடிக்கு நீங்களும், நானும் விரும்புவது கிடைக்க வேண்டும் என்று நான் ஆண்டவனிடம் பிராத்தித்துக் கொள்கிறேன். இந்தியாவின் பிரதர் இருக்கையில் நரேந்திர மோடி அமர வேண்டும் என்பதே எனது ஆசை.

மோடிக்கு நிஜமாக வேண்டும்
இது எனது விருப்பம் மட்டுமல்ல. அனைவரின் விருப்பமாகும். உங்களது கைத்தட்டல் அதை நிரூபிக்கிறது. மோடிக்கு அனைத்தும் நிஜமாக வேண்டும் என்று விரும்புகிறேன்.

மோடி என் தம்பி
மோடி எனது சகோதரர் போல. அவரிடம் பலமுறை நான் போனில் பேசியுள்ளேன். குஜராத்தி பாடல்களின் பதிவுகளையும் கூட அனுப்பியுள்ளேன். இந்த விழாவுக்கு யாரை அழைக்க வேண்டும் என்று நான் யோசித்தபோது என் மனதில் முதலில் வந்த பெயர் மோடிதான் என்றார் அவர்.

அக்காவின் அழைப்பு கெளரவமானது
நிகழ்ச்சியில் மோடி பேசுகையில், மங்கேஷ்கர் குடும்ப நிகழ்ச்சிக்கு, அதிலும் மருத்துவமனை திறப்புக்கு என்னை சிறப்பு விருந்தினராக அவர்கள் அழைத்துள்ளதை நான் பெரும் கெளரவமாக கருதுகிறேன். 6 மாதங்களுக்கு முன்பே லதா அக்காவிடமிருந்து எனக்கு கடிதம் வந்து விட்டது. இதயத்தைத் தொட்ட கடிதமாகும் அது. அதை எனது வாழ்க்கையின் பெரும் பரிசாக கருதுகிறேன் என்றார்.

ஆஷா போன்ஸ்லே
விழாவில் மங்கேஷ்கர் குடும்பத்தைச் சேர்ந்த ஆஷா போன்ஸ்லே, உஷா மங்கேஷ்கர், மீனா கடிகர், ஹிருதயநாத் மங்கேஷ்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications