டெல்லி வெற்றி மட்டுமில்லை.. இந்தியாவின் வெற்றி.. கெஜ்ரிவால் உற்சாக பேச்சு
Recommended Video
டெல்லி: இது டெல்லி வெற்றியல்ல, இந்தியாவின் வெற்றி என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி அபார வெற்றி பெற்ற நிலையில், கட்சி அலுவலகத்தில் வைத்து, உரையாற்றினார் கெஜ்ரிவால். அப்போது அவர் கூறியதாவது:

டெல்லி மக்களுக்கு அனுமன் பகவான் ஆசீர்வாதம் வழங்கிய தினம் இது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாங்கள் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய ஹனுமான் எங்களுக்கு சரியான பாதையை காட்ட வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம்.
புதிய 'மக்கள் பணி அரசியல்' டெல்லியில் பிறந்துள்ளது. சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி இதை பறைசாற்றுகிறது. இது டெல்லிக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல, முழு பாரதத்திற்கும் கிடைத்த வெற்றி.
என்னை தங்கள் மகனாக கருதிய டெல்லி மக்களின் வெற்றி இது. ஆம் ஆத்மி மீதான நம்பிக்கையை மூன்றாவது முறையாக வெளிப்படுத்திய டெல்லி மக்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். என்னை தங்கள் மகனாக கருதி எங்களுக்கு வாக்களித்த மக்களின் வெற்றி இது. டெல்லியின் வளர்ச்சிக்கு நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம். இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.
கெஜ்ரிவாலை தீவிரவாதி என பாஜக தலைவர்கள் சிலர் விமர்சனம் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஆனால், நான் தீவிரவாதியா, உங்கள் மகனா என்பதை நீங்களே முடிவெடுங்கள் என கெஜ்ரிவால் பிரச்சாரம் செய்திருந்தார். இந்த நிலையில்தான், தனது வெற்றியை அவர் டெல்லி மகனின் வெற்றி என வர்ணித்து, பாஜகவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications