வக்ஃப் வாரியம் சட்ட திருத்தம் ஏன் முக்கியம்? இதன் நன்மைகள் என்னென்ன? மோடி கொண்டு வந்த சீர்திருத்தம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வக்ஃப் வாரியம் என்பதே இந்தியாவில் ஒரு சர்ச்சைக்குரிய.. விவாதத்திற்குரிய விஷயம்தான். வக்ஃப் வாரியம் பொதுவாக பல சட்டப் போராட்டங்கள், குழப்பங்கள் மற்றும் பல சர்ச்சைகளை எதிர்கொண்டு வந்து உள்ளது.

வக்ஃப் வாரியம் அமைப்பில், அதன் சட்டத்தில் மோடி சீர்திருத்தங்களை கொண்டு வரும் நிலையில் அதை பற்றிய விவாதம் நாடு முழுக்க திடீரென தீவிரம் அடைந்துள்ளது. இஸ்லாமிய சட்டத்தில் ஆழமாக வேரூன்றியது வக்ஃப் அமைப்பு. இந்தியாவில் மத மற்றும் கலாச்சார விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தியது மட்டுமின்றி நில உரிமை மற்றும் நிர்வாகம் தொடர்பான மோதல்களுக்கும் வக்ஃப் வாரியம் வழிவகுத்தது.

narendra modi

பிரதமர் மோடி 3.0 அரசுக்கு கீழ் இந்தியா பல மாற்றங்களை கண்டு வருகிறது. அந்த வகையில் வக்ஃப் வாரியம் அமைப்பிலும், அதன் சட்டத்திலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. வக்ஃப் வாரியம் என்றால் என்ன.. அது சர்ச்சையில் சிக்கியது என்ன.. அதன் சட்டத்தில் என்ன மாதிரியான மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன.. அவை ஏன் நன்மை பயக்கும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

வக்ஃப் என்றால் என்ன?

வக்ஃப் என்பது ஒரு இஸ்லாமிய அறக்கட்டளை வாரியம் ஆகும். மத அல்லது தொண்டு நோக்கங்களுக்காக சொத்து நன்கொடையாக வழங்கப்படும். ஒரு சொத்து வக்ஃப் வாரியத்திற்கு கீழ் என்று உரிமை கோரப்பட்டால்.. அந்த சொத்தை விற்கவோ அல்லது மாற்றவோ முடியாது. அந்த சொத்து அதன்பின் வக்ஃப் வாரியத்தின் கட்டுப்பாட்டிலேயே நிரந்தரமாக இருக்கும். இந்த சட்டம் கேட்பதற்கு நல்லது போன்று தோன்றினாலும்..நடைமுறையில், இது குறிப்பிடத்தக்க சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது. தவறான மேலாண்மை மற்றும் பல்வேறு நிலங்களுக்கு வக்ஃப் வாரியத்தின் சட்டவிரோத உரிமைகோரல்களுக்கு வழி வகுத்தது.

narendra modi

வக்ஃப் எப்படி ஆயிரக்கணக்கான சொத்துக்களை உரிமை கோர முடியும்?

வக்ஃப் வாரியம் சிக்கி உள்ள முதன்மையான சர்ச்சைகளில் ஒன்று.. அந்த அமைப்பு நிலங்களை கையகப்படுத்துவதும் விதம் அதை நிர்வகிக்கும் விதம்.. அதனிடம் உள்ளிட்ட சொத்துக்களின் அளவுதான். இந்தியா முழுவதும், ஆயிரக்கணக்கான சொத்துக்கள் வக்ஃப் வாரியத்தின் சொத்துக்கள் என்று பதிவு செய்யப்பட்டு உள்ளன. தனியார் நிலம் முதல் பிரதான நகர்ப்புற ரியல் எஸ்டேட் வரை பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் முறையான ஆவணங்கள் அல்லது சரிபார்ப்பு இல்லாமல் வக்ஃப் என பதிவு செய்யப்பட்டுள்ளன.

பல சந்தர்ப்பங்களில், மக்கள் தங்கள் தனிப்பட்ட சொத்துக்கள் தங்களுக்குத் தெரியாமலோ அல்லது ஒப்புதல் இல்லாமலோ வக்ஃப் ஆக பதிவு செய்யப்பட்டதைக் கண்டறிந்து அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதன் காரணமாக மக்கள் பலர் தங்களின் நிலங்களை மீட்க வேண்டி சட்ட போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. பலர் இப்படி தங்களின் நிலங்களை மீட்க.. பல வருடங்களாக சட்ட போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். பல இடங்களில் நிலங்களை வக்ஃப் வாரியம் முறைகேடாக கைப்பற்றியதாக புகார்கள் வைக்கப்பட்டு உள்ளன.

வக்ஃப் நிலம் எப்படி வணிக ரீதியாக பயன்படுத்தப்படுகிறது?

வக்ஃப் நிலத்தை வணிக ரீதியாகப் பயன்படுத்துவது இந்த விவகாரம் சர்ச்சையாக முக்கிய காரணம். வக்ஃப் சொத்துக்கள் தொண்டு நோக்கங்களுக்காக நோக்கமாக இருந்தாலும் அந்த நிலங்கள் முறைகேடாக வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படுகிறது.

பல சந்தர்ப்பங்களில், வக்ஃப் நிலம் வணிக நோக்கங்களுக்காக தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. ஒரு அறக்கட்டளையாக இருக்கும் வக்ஃப் வாரியம்.. வருவாய் ஈட்டும் முயற்சியாக மாற்றுகிறது. வக்ஃப் வாரியம் இப்படி நிலங்களை வணிக ரீதியாக பயன்படுத்துவது கடுமையான விமர்சனங்களை சந்தித்து உள்ளது. முக்கியமாக தொண்டு நிறுவனம் என்பதால் வரி இல்லாமல் நிர்வகிக்கப்படும் நிலங்கள்.. இப்படி வணிக நோக்கத்திற்கு பயன்படுத்தப்படுவது கடும் சர்ச்சைகளை சந்தித்து உள்ளது.

narendra modi

வக்ஃப் திருத்த மசோதா: பாஜக கொண்டு வந்த சீர்திருத்தம்

இப்படிப்பட்ட நிலையில்தான்..இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், வக்ஃப் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வர, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு முன்மொழிந்துள்ளது. வக்ஃப் திருத்த மசோதா கடுமையான விதிமுறைகளை அறிமுகப்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், வக்ஃப் சொத்துக்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

வக்ஃப் நிலங்களை நிர்வகிப்பதற்கான மிகவும் வலுவான கட்டமைப்பை நிறுவுவதை.. முறையான சட்டங்களை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. வக்ஃப் நிலங்களை அவற்றின் தொண்டு நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது. வக்ஃப் வாரிய சட்டங்களில் மத்திய அரசால் முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் பல இஸ்லாமிய அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பை சந்தித்துள்ளன.

இந்த மசோதா தங்கள் மத உரிமைகள் மீதான தாக்குதல் என்று இஸ்லாமிய அமைப்புகள் கூறி உள்ளன. அதே சமயம் வக்ஃப் வாரியத்தின் அதிகார மீறல், நில அபகரிப்பு ஆகியவற்றை எதிர்க்கும் மக்கள் இந்த சட்டங்களை பரவலாக ஆதரித்து உள்ளனர்.

2024 வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்திற்குப் பிறகு என்ன மாறும்?

வக்ஃப் வாரிய சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள், நிறைவேற்றப்பட்டால், இந்தியாவில் வக்ஃப் சொத்துக்கள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன என்பதில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் வரும். வக்ஃப் வாரியம் இப்போது இருப்பது போல எல்லா நிலங்களையும் எளிதாக உரிமை கோர முடியாது. நிலங்களை உரிமை கோருவதில் கட்டாய சரிபார்ப்பு என்ற விதி கொண்டு வரப்படும்

இது சட்டபூர்வமான, உண்மையான சொத்துக்கள் மட்டுமே வக்ஃப் கீழ் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்யும். இந்த மசோதா வக்ஃப் நிலத்தை வணிக ரீதியாக பயன்படுத்துவதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும். லாப நோக்கத்திற்காக சொத்துக்களை குத்தகைக்கு விடுவது தடுக்கப்படும். கூடுதலாக, வக்ஃப் வாரியங்களில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதில் மோடி அரசாங்கம் ஆர்வமாக உள்ளது. பெரும்பாலும் தவறான நிர்வாகம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு வக்ஃப் வாரியம் ஆளாகாமல் கட்டுப்படுத்தப்படும். வக்ஃப் வாரிய சட்ட திருத்தங்கள் சம உரிமையை, நிலைபாதுகாப்பை , சட்ட பாதுகாப்பை அனைவர்க்கும் வழங்கும்.

காங்கிரஸும் வக்ஃபுவிவகாரத்தில் தவறான நிலைபாடும்:

பிரிவினையின் போது.. இந்தியாவில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் விட்டுச் சென்ற சொத்துக்களை வக்ஃபுக்கு மாற்றியதில் காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய பங்கு உள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த செயல் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

சிறுபான்மை சமூகங்களை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்த காங்கிரஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. அதே நேரத்தில் பெரும்பான்மை மக்களின் உரிமைகளை புறக்கணிப்பதாகவும் இந்த நடவடிக்கை பார்க்கப்பட்டது. வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட இந்த நடவடிக்கை கடுமையான விமர்சனங்களை சந்தித்ததோடு.. பெரிய வரலாற்று பிழையாகவும் மாறியது. இந்த தவறுகளைதான் தற்போது பிரதமர் மோடியின் அரசு சரி செய்துள்ளது.

வக்ஃப்பில் பெண்கள், போராக்கள் அல்லது ஆகா கானிகள் இல்லாத நிலை:

வக்ஃப்பின் மற்றொரு சர்ச்சைக்குரிய அம்சம் அதன் பாலின பாகுபாடு. நாடு முழுக்க பல லட்சம் ஏக்கர் சொத்துக்களின் நிர்வாகத்தை மேற்பார்வையிடும் வக்ஃப் வாரியங்கள் பாலின ரீதியாக ,மிகவும் பிற்போக்கு நோக்கம் கொண்டது. பெண்கள், போராக்கள் அல்லது ஆகா கானிகள் இதில் பங்கேற்க அனுமதிக்கப்படுவது இல்லை. பொது நலனுக்குச் சேவை செய்வதாகக் கூறும் ஒரு வாரியத்தில் பெண்களுக்கு இடம் இல்லாதது.. ஒரு சேவை அமைப்பில்.. பாலின சமத்துவம் இல்லாதது கடுமை விமர்சனங்களை சந்தித்து உள்ளது.

முஸ்லீம் சமூகத்தின் முக்கிய பிரிவினரின் பிரதிநிதித்துவம் இல்லாதது தற்போதைய வக்ஃப் வாரிய அமைப்பில் உள்ள பெரிய குறைபாட்டை அம்பலப்படுத்துகிறது. வக்ஃப் வாரிய சட்டத்தில் விரிவான சீர்திருத்தங்களின் தேவையை இது காட்டுகிறது.

அரசுக்கு போன பல ஆயிரம் மின்னஞ்சல்கள்

முன்மொழியப்பட்ட வக்ஃப் சீர்திருத்தங்கள் நாடு முழுவதும் உள்ள இந்து அமைப்புகளிடமிருந்து பெரும் வரவேற்பைத் பெற்றுள்ளன . வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை முன்னோக்கி கொண்டு செல்ல வலியுறுத்தி, லட்சக்கணக்கான மின்னஞ்சல்கள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. வக்ஃப் நிர்வாகத்தில் சமத்துவம், நேர்மை, வெளிப்படைத்தன்மையை கொண்டு வர வேண்டும் என்று கோரி இந்த மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு உள்ளன.

இந்து அமைப்புகள் குறிப்பாக வக்ஃப் நிலங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் மற்றும் அனைத்து குடிமக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளன. தற்போதைய நிலவரப்படி, அரசாங்கத்திற்கு பல்லாயிரக்கணக்கான மின்னஞ்சல்கள் வந்துள்ளன, இது முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களுக்கு வலுவான ஆதரவைக் காட்டுகின்றன. .

முடிவுரை:

இந்தியாவில் வக்ஃப் வாரிய பிரச்சனை.. வெறும் சட்டப் பிரச்சினை மட்டுமல்ல. இது நாட்டின் மிகப்பெரிய அரசியல் பிரச்சனை, சமூக பிரச்சனை... முக்கியமாக மக்களுக்கான நிலைப்பாதுகாப்பு மற்றும் உரிமை தொடர்பான பிரச்சனை. பிரதமர் மோடி அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதா இந்த பிரச்சனைகளை தீர்க்க கூடிய அருமருந்து. இந்த அமைப்பின் தவறான பயன்பாட்டைத் தடுப்பதற்கும்.. சட்டங்களை இந்த அமைப்பு மீறுவதை தடுக்கவும்.. நிலைப்பாதுகாப்பை உறுதி செய்யவும் கொண்டுவரப்பட்டு உள்ளது.

வக்ஃப் வாரியத்தின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும், பொது நலனைப் பாதுகாப்பதற்கும் ஒரு துணிச்சலான நடவடிக்கையாக இந்த சட்டம் பார்க்கப்படுகிறது. மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு இருந்தாலும், சீர்திருத்தத்தின் தேவை மறுக்க முடியாதது. நியாயமான நிர்வாகத்திற்கான பாஜகவின் அர்ப்பணிப்பு மற்றும் அனைத்து சமூகங்களுக்கும் நீதி உறுதி செய்ய பாஜக கொண்டுள்ள நிலைப்பாட்டை இந்த சட்டம் உணர்த்துகிறது. இதன் காரணமாகவே பல லட்சம் இந்த சட்ட திருத்தத்தை ஆதரித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+