விடியவிடிய தாக்குதல்.. சுக்குநூறாக்கப்பட்ட பாகிஸ்தானின் 50 டிரோன்கள்.. கர்ஜித்த இந்திய ராணுவம்

Subscribe to Oneindia Tamil

ஜம்மு காஷ்மீர்: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தானிடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் கொதிப்படைந்த பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. புதன்கிழமை இரவு தாக்குதல் நடத்தப்பட்டு நிலையில், மீண்டும் வியாழக்கிழமை இரவு தாக்குதலை மேற்கொண்டது. வெள்ளிக்கிழமை அதிகாலை வரை விடிய விடிய நடந்த தாக்குதலில் பாகிஸ்தானின் 50 டிரோன்களை இந்திய ராணுவம் அழித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் இந்தியாவை கொதிப்படையச் செய்த நிலையில், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவத்தினர் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதலை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.

pakistan operation sindoor india pakistan

இந்தியாவின் இந்த தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்திருந்த நிலையில், புதன்கிழமை இரவு இந்தியாவின் 15 நகரங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்தது. ஆனால், நடுவானில் வைத்தே இந்தியா அந்த தாக்குதலை முறியடித்தது.

பாகிஸ்தான் அத்துமீறி இந்திய எல்லைக்குள் தாக்குதல் நடத்த முயற்சி செய்து வருகின்றனர். ஜம்மு விமான நிலையம், சம்பா, ஆர்எஸ் புரா, ஆர்னியா உள்ளிட்ட பகுதிகளை நோக்கி பாகிஸ்தானில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கிருந்து வந்த 8 ஏவுகணைகளையும் தடுத்து எஸ்400 சுதர்சன் சக்ரா தடுப்பு அமைப்புகள் முறியடித்தன.

இதைத்தொடர்ந்து இந்தியா மீது மீண்டும் வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் தாக்குதலை மேற்கொண்டது. வெள்ளிக்கிழமை அதிகாலை வரை கடும் மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தானின் 8 ஏவுகணைகள் தடுக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமான தளத்தில் தாக்குதல் நடத்த முயன்ற நிலையில், இந்திய விமானப் படை பதிலடியை கொடுத்துள்ளது. நேற்று 7 மணியளவில் தொடங்கிய பாகிஸ்தானின் அத்துமீறல் விடிய விடிய நடைபெற்றது.

பாகிஸ்தான் 50க்கும் மேற்பட்ட டிரோன்களை பயன்படுத்தி இந்தியா மீது தாக்குதல் மேற்கொண்டது. உதம்பூர், சம்பா, ஜம்மு, அக்னூர், நக்ரோட்டா மற்றும் பதான்கோட் உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த டிரோன் தாக்குதலை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்தது. 50க்கும் மேற்பட்ட டிரோன்கள் அழிக்கப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+