கொரோனா வார்டில் பாலிவுட் பாட்டுக்கு சூப்பர் டான்ஸ் ஆடும் டாக்டர்.. வைரல் வீடியோ

Subscribe to Oneindia Tamil

குவகாத்தி: அஸ்ஸாமில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் ஒருவர் கொரோனா வார்டில் பாலிவுட் பாடலுக்கு நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் தினசரி 3லட்சம் பேருக்கு சராசரியாக கொரோனா பரவி வருகிறது. உயிரிழப்பும் தினசரி 3 ஆயிரம் என்கிற அளவிற்கு உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் சுமார் 75 லட்சம் பேருக்கு பரவி உள்ளது. தினமும் சுமார் ஆயிரம் பேர் வரை இறக்கிறார்கள்.

 WATCH: A doctor dances to the tune of a Bollywood number in a COVID ward in Assam

கொரோனாவுக்கு எதிரான இந்த போராட்டத்தில் முன்வரிசை போர்கள வீரர்களாக டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளார்கள்.

நாடு முழுவதும் டாக்டர்கள் கொரோனா ஒழிப்பு பணியில் இரவு பகலாக தங்களை அர்பணித்து பணியாற்றி வருகிறார்கள். அவர்களின் தியாக உணர்வு மற்றும் கடின உழைப்பால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல லட்சம் பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். மருந்தே இல்லாத நிலையிலும் கொரோனவை எதிர்த்து போராடி வரும் மருத்துவர்கள், தங்களது அயராத பணிகளுக்கு மத்தியில் உற்சாகமாக இயங்கி வருகிறார்கள்.

இந்த சூழலில் அஸ்ஸாமில் உ.ளள சில்சார் மருத்துவக் கல்லுரியில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் ஒருவர் பாலிவுட் பாடலுக்கு கொரேனா வார்டில் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் டாக்டர் அற்புதமாக நடனம் ஆடுகிறார். அவர் முழுவதும் பிபி உடை அணிந்து இருந்ததால், அவரது முகம் தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+