டோணியை விமர்சனம் செய்வோர் எல்லாம் தாவூத்தின் சிஷ்யர்கள்: சு.சுவாமி கடும் காட்டம்
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோணியை விமர்சனம் செய்யும் டிவி சேனல் விமர்சகர்கள், தாவூத் இப்ராஹிமின் சிஷ்யர்கள் என்று பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரான சுப்பிரமணியன்சுவாமி காட்டமாக கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து டோணியை கழற்றிவிட்டு, கோஹ்லியின் ஆதிக்கத்தை நிலைநாட்ட சில உள்குத்து வேலைகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.
பிசிசிஐ தலைவராக பதவியை தொடர முடியாத நிலையில் ஐசிசி சேர்மன் சீனிவாசன் சிக்கியுள்ளதால், அவருக்கு நெருக்கமானவராகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாகவும் விளங்கிய டோணி பழிவாங்கப்படுவதாக பரவலாக குற்றம்சாட்டப்படுகிறது.
Watch how Dawood's chelas on TV are targeting Dhoni. After failing to do anything to Srini, now they are after Dhoni.
— Subramanian Swamy (@Swamy39) October 14, 2015 இந்நிலையில், சுப்பிரமணியன்சுவாமி இன்று வெளியிட்ட டிவிட் ஒன்றில், "டிவி சேனல்கள் வழியாக, தாவூத் இப்ராஹிமின் சிஷ்யர்கள், டோணியை எப்படி குறிவைக்கிறார்கள் பாருங்கள். ஸ்ரீநிக்கு (சீனிவாசன்) எதிராக எதையும் செய்ய முடியாமல் தோல்வியடைந்ததால், தற்போது டோணியை குறிவைக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியை கட்டுப்படுத்த நிழலுலக தாதா தாவூத் தொடர்ந்து முயலுவதாகவும், ஸ்ரீநிவாசன், டோணி போன்றோர் அதற்கு எதிராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், சுப்பிரமணியன் சுவாமியின் குற்றச்சாட்டு முக்கியத்துவம் பெறுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications