ஜெர்மனி தூதரின் மனைவியுடன் முன்னாள் மத்திய அமைச்சர் குர்ஷித் டான்ஸ் ஆடும் வீடியோவை பார்த்தீங்களா?
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் மைக்கேல் ஸ்டெய்னரின் மனைவியோடு சேர்ந்து நடனம் ஆடிய வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
ஷாருக்கான், சயிப் அலி கான், ப்ரீத்தி ஜிந்தா நடிப்பில் கடந்த 2003ம் ஆண்டு வெளியான இந்தி படம் கல் ஹோ நா ஹோ. கரண் ஜோஹார் இயக்கிய அந்த படத்தில் வரும் ஒரு பாடலை முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் மைக்கேல் ஸ்டெய்னர் மற்றும் அவரது மனைவி எலீஸை வைத்து ரீமேக் செய்துள்ளனர்.
ஸ்டெய்னர் மற்றும் அவரது மனைவிக்கு பாலிவுட் படங்கள் என்றால் மிகவும் பிடிக்குமாம். அதனால் தான் இந்த வீடியோவை எடுத்து பாலிவுட்டுக்கு அர்ப்பணித்துள்ளனர்.

குர்ஷித்
வீடியோவில் ஷாருக்கான் கதாபாத்திரத்தில் ஸ்டெய்னரும், சயிப் அலி கான் கதாபாத்திரத்தில் சல்மான் குர்ஷிதும், ப்ரீத்தி ஜிந்தா கதாபாத்திரத்தில் ஸ்டெய்னரின் மனைவி எலீஸும் நடித்துள்ளனர்.

கல் ஹோ நா ஹோ
படத்தில் வரும் கல் ஹோ நா ஹோ பாடலை அமெரிக்காவில் படமாக்கினர். ஆனால் அந்த பாடலின் ரீமேக்கை டெல்லியில் படமாக்கியுள்ளனர். பாடலில் ஸ்டெய்னர் குர்தா அணிந்து வருகிறார். அவரின் மனைவி சேலை அணிந்து நடித்துள்ளார்.

ஸ்டெய்னர்
லெபெ ஜெட்ஸ்ட் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த வீடியோ டெல்லியில் உள்ள ஜெர்மனி தூதரகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. லெபெ ஜெட்ஸ்ட் என்றால் கல் ஹோ நா ஹோ என்று அர்த்தம். வீடியோவை ஸ்டெய்னர், நடிகர் சயிப் அலி கான், அவரது தாயும், நடிகையுமான ஷர்மிளா தாகூர், பாடல் ஆசிரியர் ஜாவித் அக்தர் ஆகியோர் வெளியிட்டனர்.

அரசு
இருநாட்டு உறவு என்பது அரசுக்கும் அரசுக்கும் இடையேயானது என்பதை தாண்டி மக்களுக்கும், மக்களுக்கும் இடையேயான உறவு ஆகும். அதை தான் இந்த வீடியோ மூலம் தெரிவித்துள்ளோம் என்று ஸ்டெய்னர் தெரிவித்துள்ளார்.
எலீஸ்
பாடலில் இந்தியில் வாயசைப்பது தான் கடினமாக இருந்தது. என் மனைவியிடம் 150 பாலிவுட் பட டிவிடிக்கள் உள்ளன. அவருக்கு பிடித்த இந்தி படம் காகஸ் கெ பூல் என்கிறார் ஸ்டெய்னர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications