கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து 15,000 கனஅடி நீர் திறப்பு
கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து 15,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
பெங்களூர்: கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து 15,000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
கர்நாடகத்துக்கும், தமிழகத்துக்கும் காவிரி விவகாரத்தில் பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக அணைகளில் தண்ணீர் இருந்து உச்சநீதிமன்றமே உத்தரவிட்ட போதிலும் தண்ணீர் இல்லை என்று பஞ்சப் பாட்டு பாடும் கர்நாடக அரசு எப்போதும் நீதிமன்றத் தீர்ப்பை மதிப்பதில்லை.
இந்நிலையில் காவிரி நீர் எந்த ஒரு மாநிலத்துக்கும் சொந்தமில்லை என்றும் தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து காவிரி மேலாண்மை வாரியம் கோரிக்கை தமிழகத்தில் எழுந்தது.

விவசாயிகள் கோரிக்கை
கர்நாடகத்தில் காவிரி நீரை திறந்துவிடுமாறு விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். எனினும் எதற்கும் செவிசாய்க்காமல் இருந்தது கர்நாடகம்.

கனமழை
தென்மேற்கு பருவமழை தொடங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் கர்நாடகத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டியுள்ளது. இந்த மழையால் கபினி உள்ளிட்ட பெரும்பாலான அணைகள் நிரம்பிவிட்டன.

15,000 கனஅடி நீர்
கபினி அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 30,000 கன அடியாக இருக்கிறது. இதனால் கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 15,000 கன அடி நீர் கடந்த ஜூன் 14-ஆம் தேதி திறக்கப்பட்டது.

அதிகரிப்பு
இதைத் தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்களுக்கு கபினியில் இருந்து திறந்துவிடப்பட்டது. இந்நிலையில் அணையில் தண்ணீரின் அளவு குறைந்ததை அடுத்து அணையிலிருந்து வினாடிக்கு 1000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் கபினி அணையில் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் தற்போது மீண்டும் 15,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications