கொல்கத்தா மருத்துவர் கொலை.. ஆதரங்களை அழித்த காவல்துறை! போலீஸை தூக்கிய சிபிஐ.. மம்தாவுக்கு தலைவலி
கொல்கத்தா: கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில் அடுத்தடுத்து பல கைது நடவடிக்கைகள் சிபிஐயால் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொலை தொடர்பான ஆதாரங்களை அழித்ததாக காவல்துறை அதிகாரியை சிபிஐ கைது செய்திருக்கிறது. இந்த நிலையில் கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில் ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கையில் காவல்துறை ஈடுபட்டது உறுதியாகி உள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் வடக்கு கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுகலை பெண் பயிற்சி மருத்துவக் கல்லூரி மாணவி கடந்த ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

உடற்கூறு ஆய்வில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரிய வந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை இந்த பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவம் ஏற்படுத்தியது.
இந்நிலையில் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த நிலையில் மாணவி கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதை அடுத்து அவர்கள் கடந்த சில நாட்களாக சம்பவம் நடைபெற்ற மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுவதிலும், தீவிர சோதனை நடத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையான பயிற்சி மருத்துவர் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக உடற்கூறு ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட மாணவியின் உடல் ஆகஸ்ட் 9ஆம் தேதி உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. கைகளைக் கொண்டு கழுத்தை நெரித்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்.
மேலும், பாலியல் வன்கொடுமை நடந்ததற்கான மருத்துவ ஆதாரங்கள் கிடைத்திருக்கிறது. அந்த மாணவியின் பிறப்புறுப்பில் 151 கிராம் ஆண் திரவம் மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. உடலில் சில இடங்களில் ரத்தம் உறைந்திருக்கிறது. மூக்கு, கழுத்து, கை, கண்ணம், உதடு உள்ளிட்ட வெளிப்பகுதிகளில் 16 இடங்களிலும், கழுத்து, உள்தசை, உச்சந்தலை என உள்பகுதிகளில் ஒன்பது இடங்களில் மிக கொடூரமான காயங்கள் இருக்கிறது.
தனக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவத்தை எதிர்த்து அவர் போராடி இருக்கிறார். மேலும் கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் நகத்தில் இருந்த ரத்த மாதிரியும் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கும் சஞ்சய் ராயின் ரத்த மாதிரியும் ஒன்றாக இருப்பதால் அவர் கொலையில் நேரடியாக ஈடுபட்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில் கொலை சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என குற்றம் சாட்டப்படும் நிலையில் கொலையாளி என கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராயிடம் சிபிஐ அதிகாரிகள் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வரான சந்திப் கோஷ், நிதி முறைக்கீடு, ஆதரவற்ற சடலங்களை விற்பனை செய்தது உள்ளிட்ட பல புகார்களின் கீழ் சிபிஐயால் ஏற்கனவே செய்யப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் கொலை நடந்த போது முதற்கட்டமாக விசாரணையை நடத்திய தாலா காவல் நிலைய பொறுப்பு காவல் அதிகாரி அபிஜித் மண்டலை சிபிஐ கைது செய்துள்ளது. முதல் தகவல் அறிக்கையை தாமதமாக பதிவு செய்ததாக அபிஜித் மண்டல் மீது புகார் கூறப்படுகிறது.
மேலும் அபிஜித் மண்டலும், சந்திப் கோஷும் இணைந்து கொலை வழக்கில் ஆதாரங்களை அளித்ததாக குற்றச்சாட்டு பதிவான நிலையில் இந்த வழக்கிலும் சிபிஐ கைது செய்துள்ளது. தொடர்ந்து இவர்களை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றமும் அனுமதி வழங்கியது.
இந்த நிலையில் காவல்துறையினரை ஆதாரங்களை அளிக்கும் செயலில் ஈடுபட்டு இருப்பது உறுதியாகி உள்ளதால் மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளது மேற்கு வங்க பாஜக. இது தொடர்பாக அம்மாநில எதிர்க்கட்சித் தலைவரான சுவேந்து அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில்," அபிஜித் மண்டலை சிபிஐ கைது செய்திருக்கும் நிலையில் கொல்கத்தா காவல்துறை ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது உறுதியாக தெரிய வந்திருக்கிறது. இதற்கு பொறுப்பேற்று மம்தா பானர்ஜி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். கொல்கத்தா கமிஷனர் வினோத் கோயலை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்" என கூறி இருக்கிறார்.
-
கட்சியையே பறிகொடுக்கும் மம்தா? மே.வங்கத்தில் எதிர்க்கட்சி தலைவரான சஸ்பெண்ட் எம்எல்ஏ! ரிதப்ரதா பானர்ஜி யார்? -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications