மே.வங்க உள்ளாட்சி தேர்தல்.. 'கில்லி'யாக பெரும்பான்மை இடங்களை 'அள்ளிய' மமதாவின் திரிணாமுல்!!
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே கைப்பற்றியுள்ளது. இம்மாநிலத்தில் காலூன்றி விடலாம் என கனவு கண்டன பாரதிய ஜனதாவால் சொற்ப இடங்களைத்தான் கைப்பற்ற முடிந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18 மற்றும் ஏப்ரல் 25 ஆகிய 2 கட்டமாக நடைபெற்றது. இத்தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே பெரும்பாலான இடங்களில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான் முன்னிலை வகித்தது.
- மேற்கு வங்கத்தின் மொத்தம் 91 நகராட்சிகளில் 71 நகராட்சிகளை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது.
- 144 வார்டுகளைக் கொண்ட கொல்கத்தா மாநகராட்சியில் 114 இடங்களை திரிணாமுல் காங்கிரஸும் 16 இடங்களை இடதுசாரிகளும் வென்றுள்ளன.
- கொல்கத்தா மாநகராட்சி மேயரும் திரிணாமுல் வேட்பாளருமான ஸ்வன் சட்டோபத்யாய 5,500 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
We dedicate our victory to people of Bengal. I request party workers to stay away from victory rallies today in light of #earthquake tragedy
— Mamata Banerjee (@MamataOfficial) April 28, 2015 - கொல்கத்தா துணை மேயரான திரிணாமுல் காங்கிரசின் ஃபர்ஷானா ஆலம் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார்.
- கொல்கத்தா மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவரும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளருமான ரூபா பாக்சி தோல்வியைத் தழுவியுள்ளார்.
- இந்த தேர்தல் வெற்றி குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள திரிணாமுல் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி, வெற்றியை மக்களிடம் சமர்பிப்பதாக பதிவிட்டுள்ளார். அதே நேரத்தில் நிலநடுக்க பேரிழப்பால் வெற்றி விழா கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications