கர்நாடக நதியில் கன்னடர்களுக்கு எல்லா உரிமையும் உண்டு... பிரகாஷ் ராஜ் சொல்கிறார்!
மகதாயி நதியில் கர்நாடகாவிற்கு எல்லா உரிமையும் இருக்கிறது என்று நடிகர் பிரகாஷ்ராஜ் குறிப்பிட்டு இருக்கிறார்.
Recommended Video

பெங்களூர்: கர்நாடகாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையில் எப்படி காவேரி தண்ணீர் பிரச்சனை இருக்கிறதோ அதேபோல் கோவாவிற்கும், கர்நாடகாவிற்கும் இடையில் தண்ணீர் பிரச்சனை இருக்கிறது. மகதாயி நதி பங்கீட்டில் இரு பகுதிகளுக்கும் இடையில் அடிக்கடி பிரச்சனை உருவாகி வருகிறது.
தற்போது இந்த பங்கீடு தொடர்பாக பெங்களூர் முழுக்க போராட்டம் நடந்து வருகிறது. மேலும் கர்நாடகாவின் மற்ற பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்திற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். கன்னட மக்களுக்கு தண்ணீரில் முழு பங்கு இருக்கிறது என்றுள்ளார்.

பெரிய போராட்டம்
இந்த போராட்டம் காரணமாக மொத்த கர்நாடக மாநிலமே ஸ்தம்பித்து இருக்கிறது. முக்கியமாக பெங்களூர் மொத்தமாக முடங்கி இருக்கிறது. அங்கு இருக்கும் கன்னட அமைப்புகள் அனைத்தும் இந்த போராட்டத்தை முன்னின்று நடந்துகிறது. அசம்பாவிதங்களை தடுக்க பல இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரகாஷ்ராஜ் ஆதரவு
இந்த போராட்டத்திற்கும் கர்நாடகாவை சேர்ந்த நடிகர்கள், பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். நடிகர் பிரகாஷ்ராஜ் தற்போது அவர் மாநில மக்களுக்காக களத்தில் இறங்கி இருக்கிறார். மகதாயி நதியில் கன்னட மக்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

எங்களுக்கு சொந்தம்
மேலும் ''கர்நாடகா வழியாக செல்லும் எந்த நதியாக இருந்தாலும் அது கன்னட மக்களுக்கு சொந்தமானது. அதேபோல் மகதாயி நதியும் கன்னட வழியாக செல்கிறது. எனவே இதில் கன்னட மக்களுக்கு முழு உரிமை இருக்கிறது. இந்த போராட்டத்திற்கு நான் ஆதரவு அளிக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

அரசியல்
மேலும் இவர் அரசியல்வாதிகள் மீதும் கோபம் அடைந்து இருக்கிறார். அதன்படி ''இதை வைத்து கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம். அரசியலை விட்டுவிட்டு மக்களுடன் சேர்ந்து களம் இறங்க வேண்டும். மத்தியில் பேசி தண்ணீர் வாங்கி தருகிறோம் என்று பொய் சொல்ல வேண்டாம். கர்நாடக மக்கள் தண்ணீருக்காக ஒன்றாக குரல் கொடுக்க வேண்டும்.'' என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications