லாலுவுக்கு சிறை தண்டனை- அரசியல் சதி..மேல்முறையீடு செய்வோம்- ராப்ரி தேவி
டெல்லி: தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்று அவரது மனைவி ராப்ரி தேவி கூறியுள்ளார்.

ராப்ரி தேவி
இது குறித்து ராப்ரி தேவி கூறுகையில், எங்களை பழிவாங்கிட முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். என் கணவர் சிறையில் இருந்தாலும் அவரது ஆலோசனை படி, நானும் எனது மகனும் கட்சியை வழிநடத்துவோம். இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்றார்.

மனோஜ் ஜா
மேலும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் மனோஜ் ஜா, நாங்கள் எப்போதும்போல ஒற்றுமையுடன் இருக்கிறோம். எங்களது ஆதரவு தளம் அப்படியே இருக்கிறது. லாலுதான் எங்களது தலைவர். லாலு மிகவும் அப்பாவி. நாங்கள் மேல்முறையீடு செய்வோம் என்றார்.

ரகுவன்ஸ் பிரசாத்
அக்கட்சியின் மூத்த தலைவர் ரகுவன்ஸ் பிரசாத், நிச்சயம் லாலு பிரசாத் சிறையில் இருந்து வெளியே வருவார் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

ரவிசங்கர் பிரசாத்
பாரதிய ஜனதாவின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறூகையில், ஊழல்வாதிகள் சட்டத்தின் பிடியில் சிக்கியே தீர வேண்டும் என்பதை இத்தண்டனை விவரம் உறுதிப்படுத்தியிருக்கிறது என்றார்.

ஜெகதாம்பிகா பால்
காங்கிரஸ் கட்சியின் ஜெகதாம்பிகா பால், ஊழல் முறைகேடுகளில் சிக்கினால் இதுபோன்ற தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்பதை எம்.எல்.ஏ, எம்.பிக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications