Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அயோத்தி ராமர் கோவிலை இடித்து தள்ளுவோம்.. எப்போது தெரியுமா? முதியவர் சர்ச்சை பேச்சு - வீடியோ

Subscribe to Oneindia Tamil

அயோத்தி: பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி முடிவுக்கு வரும்போது அயோத்தி ராமர் கோவிலை இடித்து தள்ளுவோம் என இஸ்லாமிய முதியவர் பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் 2024 ஜனவரி மாதம் 22ம் தேதி திறக்கப்பட உள்ளது. கோவில் கருவறையில் நிறுவப்படும் ராமர் சிலையை பிரதமர் மோடி எடுத்து வர உள்ளார்.

We will demolish Ayodhya Ram Temple after Modi-Yogi Era, says elder man and video goes viral

இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விழாவில் 3 ஆயிரம் விவிஐபிக்கள், நாடு முழுவதும் இருந்து மடாதிபதிகள், சாமியார்கள் என 4 ஆயிரம் பேர் மற்றும் 50 நாடுகளை சேர்ந்த வெளிநாடு பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

இத்தகைய சூழலில் தான் புதிதாக கட்டப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோவிலை இடித்து தள்ளுவோம் என இஸ்லாமிய முதியவர் ஒருவர் பேசும் வீடியோ வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது முதியவர் ஒருவரிடம் மைக் நீட்டி ஒருவர் ராமர் கோவில் குறித்த கேள்வியை கேட்கிறார்.

அதற்கு அந்த வீடியோவில் முதியவர், ‛‛ராமர் கோவில் கட்டி வழிபடுங்கள். ஆனால் மோடி, யோகி இல்லாத நாளில் ராமர் கோவிலை இடித்து தள்ளுவோம். மீண்டும் பாபர் மசூதி கட்டப்படும்'' என கூறுகிறார்.

அதாவது மத்தியிலும், அயோத்தி உள்ள உத்தர பிரதேசத்திலும் பாஜக ஆட்சி நடக்கிறது. பிரதமராக நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். இத்தகைய சூழலில் தான் மத்தியிலும், உத்தர பிரதேசத்திலும் பாஜக ஆட்சி அகற்றப்படும்போது ராமர் கோவிலை இடித்து தள்ளுவோம் என முதியவர் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இருப்பினும் இப்படி சர்ச்சையாக பேசிய முதியவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது பற்றிய விபரம் என்பது இன்னும் தெரியவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+