2015-க்கு பிறகு வந்தவர்களை நாடு கடத்துவோம்.. சிஏஏ குறித்து அசாம் முதல்வர் பரபர கருத்து!

Subscribe to Oneindia Tamil

கவுகாத்தி: விதிகளின் படி 2015 ஆம் ஆண்டிற்கு பிறகு வந்தவர்களை நாடு கடத்துவோம் என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியுள்ளார். அசாமில் சிஏஏவிற்கு எதிர்ப்பு உள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

சிஏஏ சட்டத்தின் படி 2015 க்கு பிறகு குடியேறியவர்களை நாடு கடத்துவோம் என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாமில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக ஹிமந்த பிஸ்வ சர்மா பதவி வகித்து வருகிறார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் கடந்த மே மாதம் சிஏஏ சட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் அமல்படுத்தியது. அசாம் மாநிலத்திற்கு குடியுரிமை திருத்த சட்டம் முக்கியத்துவமற்றது என்றும், அசாமில் குறைந்த அளவிலே வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்கள் இருப்பதால் என்றும் கடந்த மார்ச் மாதம் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியிருந்தார்.

CAA Act Assam Himanta Biswa Sharma

ஹிமந்த பிஸ்வ சர்மா பேச்சு: குடியுரிமை திருத்த சட்ட்டத்திற்கு எதிராக அசாமில் மாணவ அமைப்புகளும் 30 க்கு மேற்பட்ட பிற அமைப்புகளும் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டன. குடியுரிமை திருத்த சட்டத்தின் நகலை எரித்து போராட்டத்தில் அமைப்புகள் ஈடுபட்டு இருந்தன. அசாமில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியிருந்த நிலையில், சிஏஏ விதிகளின் படி 2015 க்கு பிறகு குடியேறியவர்களை நாடு கடத்துவோம் என்று ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு கடத்துவோம்: இது தொடர்பாக ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியிருப்பதாவது:- சிஏஏ சட்டத்தின் கீழ் குடியுரிமை கேட்டு வெறும் 2 பேர் மட்டுமே விண்ணப்பித்து இருக்கிறார்கள். 2015 க்கு முன்பாக வந்தவர்கள் சிஏஏ சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்காவிட்டால் அவர்கள் மீது வழக்கு தொடரப்படும். இதுதான் சட்டப்பூர்வ அறிவுறுத்தல்கள்.. 2015க்கு பிறகு வந்தவர்களை நாடு கடத்துவோம். மொத்தம் 5 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. இதில் விசாரணையின் போது 3 பேர் வரவில்லை.. எனவே 2 பேர் மட்டுமே விண்ணப்பித்து இருக்கிறார்கள்" என்றார்.

சிஏஏ சட்டம்: பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் சிறுபான்மையினராக இந்துக்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள், ஜெயின் உள்ளிட்ட பிற மதங்களை சேர்ந்தவர்கள் உள்ளனர். இவர்கள் அந்த நாட்டில் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாவதாக குற்றச்சாட்டு உள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாட்டில் சிறுபான்மையினராக இருப்போருக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்தது.

அமலுக்கு வந்ததாக: இதற்காக மத்திய அரசு சார்பில் சிஏஏ எனும் குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வருவதில் முனைப்பு காட்டியது. மேலும் இந்திய குடியுரிமை சட்டம் 1955ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு இந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் செய்யப்பட்டது. இந்த சிஏஏ சட்டம் கடந்த மார்ச் 11ம் தேதி அமலுக்கு கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது.

இந்த குடியரிமை திருத்தம் சட்டம் என்து பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவில் தஞ்சம் அடைபவர்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகுக்கிறது. அதன்படி அந்த 3 நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர், ஜைனர்கள், பார்சி, கிறிஸ்தவ மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்த சட்ட திருத்தம் வழிவகை செய்யும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+