வழக்குகளை கண்டு அஞ்சாமல் மக்களுக்காக போராட்டத்தை தொடருவோம்: சோனியா, ராகுல் பேட்டி
டெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை தொடர்பான வழக்கில் டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் இன்று நேரில் ஆஜராகிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்தி ஆகியோருக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கினார் நீதிபதி.
இதன்பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி, "சட்டத்தை மதித்து நீதிமன்றத்துக்கு நேரில் சென்று வழக்கை சந்தித்தோம். சட்டம் அனைவருக்கும் பொதுவானது. சட்டத்தின்மீது எங்களுக்கு நம்பிக்கையுள்ளது. உண்மை விரைவில் வெளிவரும்.

எங்களை குறிவைத்துதான் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் வழக்குகளை கண்டு ஒருபோதும் அஞ்சமாட்டோம். பாஜகவுக்கு எதிரான போராட்டம் தொடரும். இவ்வாறு சோனியா தெரிவித்தார்.
ராகுல் காந்தி பேசியதாவது: எங்களுக்கு எதிரான தவறான குற்றச்சாட்டுக்களை மோடி முன்வைத்துள்ளார். எங்களை மடக்கி விடலாம் என்று கருதுகிறார். ஆனால் ஒரு இன்ச் கூ எங்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம். ஏழைகளுக்கான, எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கோ, சோனியா, ராகுலுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி அவர்கள் பின்னால் நிற்பதாக தெரிவித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications