லெனோவா இணையதளத்தைப் போட்டுத்தாக்கிய “லிசார்ட் ஸ்குவாட்” – ஹேக்கர்களின் அட்டகாசம்
டெல்லி: உலகின் மிகப்பெரிய கணினி தயாரிப்பு நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் இணையதளம் ஹேக்கர்களால் திடீரென்று முடக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சோனி மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற ஜாம்பவான்களிடம் தன் கைவரிசையைக் காட்டிய "லிசார்ட் ஸ்குவாட்" லெனோவா இணையதளத்தை முடக்கியதற்கு பொறுப்பேற்றுள்ளது. இதன் உறுப்பினர்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

லெனோவா இணையதளத்தின் வழக்கமான முகப்புப் பக்கத்தில் அத்துமீறியுள்ள ஹேக்கர்கள், அதில் "சூப்பர் பிஷ்" என்ற வைரஸ் மென்பொருளை நுழைத்துள்ளனர்.
இதனால் பல மணி நேரத்துக்கு அந்த இணையதளத்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டதாக அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர். பின்னர் சில மணி நேரங்களில் இணையதளம் வழக்கம்போல இயங்க தொடங்கியது.
ஹேக்கிங் செயலுக்கு டுவிட்டர் வழியாக பொறுப்பேற்ற லிசார்ட் ஸ்குவாட் என்ற ஹேக்கிங் குழு "எங்களால் அடைய முடியாத இடம் என்று எதுவும் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளது. இந்த ஹேக்கிங் நடவடிக்கைக்கான காரணம் குறித்து லெனோவா நிறுவனம் அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வெளியிடவில்லை.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications