ஆந்திராவில் மாப்பிள்ளைக்கு அவ்வளவு டிமாண்டா.. 5 கோடி தர்றாங்களா.. என்னங்க சொல்றீங்க!

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: ஆந்திராவில் படித்த நல்ல வசதி உள்ள அமெரிக்க இந்திய மாப்பிள்ளைக்கு எப்போதுமே கிராக்கி அதிகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நெட்டிசன்கள் இதுபற்றி வெளியிட்ட கருத்துக்களை இப்போது பார்ப்போம்.

நம்மூரில் பெண் கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கும் நிலையில், ஆந்திராவில் மாப்பிள்ளைகளுக்கு கிராக்கி அதிகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுவும் நல்ல படித்த, வசதியான மாப்பிள்ளை அல்லது அரசு வேலையில் உள்ள மாப்பிள்ளை, ஐஏஏஸ் ஐபிஎஸ் மாப்பிள்ளை என்றால் தனி மரியாதையாம். குறிப்பாக அமெரிக்காவில் செட்டில் ஆன சாப்ட்வேர் இன்ஜினியர்கள் என்றால் ராஜமரியாதை என்கிறார்கள். ஏன் இப்படி சொல்கிறார்கள் என்பதை இந்த பதிவுகளில் பார்ப்போம்.

Well-educated American Indian grooms in Andhra Pradesh are always in high demand

ஹரி என்பவர் தனது ட்விட்டர் பதிவில் ஆந்திரா/ தெலுங்கானா மாணவர்களுக்கு அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் கிட்டத்தட்ட 50k+ சேர்க்கைகள் உள்ளன. தமிழ்நாட்டில் இருந்து வெறும் 5000 பிளஸ் தான் அமெரிக்க பல்கலையில் சேர்க்கைகள் உள்ளன. எப்படி அவ்வளவு ஈஸியாக அவர்கள் சீட் வாங்குகிறார்கள். ஏதாவது கல்வியாளர்கள் காரணமா .. காரணம் என்னவென்று சொல்ல முடியுமா என்று கேட்டிருந்தார்.

இதற்கு எஸ்கேபி கருணா என்பவர் ட்விட்டரில் அளித்துள்ள பதிலினை அப்படியே பார்ப்போம்.. "அமெரிக்காவில் இருக்கும் ஆந்திரா காலேஜ்மேட்டிடம் கேட்டேன். முக்கியமான காரணம் வரதட்சணை என்கிறான். படிப்புக்கு எவ்வளவு செலவு செய்தாலும் அதை இரு மடங்காக பெண் வீட்டில் இருந்து வாங்கி விடுவார்கள்.

ஐ.ஏ.எஸ் மாப்பிள்ளைக்கு 100 கோடி ரூபாய் வரை ரேட் போகுதாம்! அமெரிக்கா இன்ஜினியர் எனில் 5 கோடி கன்ஃபர்ம்டு. டாக்டர் பி.ஜி முடிச்சிருந்தா ஹாஸ்பிடல் கட்டி தரணும்.

நம்ம ஊரில் லோன் வாங்கிதான் படிச்சாகணும். அதிகபட்சம் நகை & கல்யாண செலவு தவிர மற்ற ஏதும் அம்மஞ்சலிக்கு தேறாது.
அதிலும் மேற்கு மாவட்டங்களில் கல்யாண பொண்ணுக்கு மாப்பிள்ளை சொத்து எழுதி தரும்படி ஆகிறதாம்!" இப்படி பதிவிட்டுள்ளார்.

இவருடைய பதிவினை பதிவிட்டு பலரும் அமோதித்துள்ளனர். தஞ்சை சாண்டி என்பவர் வெளியிட்ட பதிவில், ஆந்திராவில் உண்மையாகவே பொண்ணு கிடைகிறதுல்ல நிறைய பேறு பொண்ணோட வீட்டுக்கு பணம் கொடுத்து கல்யாணம் பண்றாங்க என்று கூறியுள்ளார்.

Well-educated American Indian grooms in Andhra Pradesh are always in high demand

விஜய் என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், உண்மைதான்...படிப்பில் மக்காக இருப்பவர் கூட அமெரிக்காவில் போய் படிக்கிறார்..அங்கு படித்து எதாவது ஒரு வேளையில் சேர்ந்து திருமணத்தில் வசூலித்துவிடுகிறார்கள்.. என்று கூறியுள்ளார்.

செந்தில் என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், "என்னோட கிளாஸ்மேட் எதுக்குடா MCA படிக்க ஆந்திராவிலிருந்து இங்க வந்தேன்னு கேட்டதுக்கு, டௌரிக்கோசம்ன்னான்.. அப்பவே MCAக்கு மஞ்சி டௌரி கிடைக்குமாம்.." என்று கூறியிருந்தார்.

வயவன் என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியாவுக்கு வந்ததும் பெரிய ஹோட்டல்ல வேலைக்கு ஆள் எடுக்குற மாதிரி பொண்ணு வீட்டுகாரங்ககிட்ட இன்டர்வியூ நடத்துவாங்க. பெரிய அமவுண்ட் வரதட்சணையா படிஞ்சா கல்யாணம்தான். கல்யாண செலவையும் பெண் வீட்டார் தான் செய்யனும்." என்று ஆந்திராவில் உள்ள நிலையை கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+