மேற்குவங்கத்தில் 71 வயது கன்னியாஸ்திரி பலாத்காரம்: சிஐடி விசாரணைக்கு மம்தா உத்தரவு
கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் 71 வயது கன்னியாஸ்திரி ஒருவரை 12 பேர் கொண்ட கும்பல் ஒன்று பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயங்கிய நிலையில் அவர் கிடந்தபோது பீரோவை உடைத்து உள்ளே இருந்த சுமார் 12 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தையும் கொள்ளயடித்த அந்த கும்பல் தலைமறைவானது.
இந்த சம்பவத்துக்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, விரைந்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
71 வயது கன்னியாஸ்திரி
நாடியா மாவட்டம் ரனாகாட் பகுதியில் உள்ள கன்னியாஸ்திரிகள் மடத்துக்குள் இன்று அதிகாலை சுமார் ஒரு மணியளவில் ள் புகுந்த 12 பேர் கொண்ட ஒரு கும்பல், உள்ளே தூங்கிக்கொண்டிருந்த சுமார் 70 வயது மதிக்கத்தக்க கன்னியாஸ்திரியின் கழுத்தை பிடித்து நெரித்து அவரை கொடூரமான முறையில் பலாத்காரம் செய்தது. மயங்கிய நிலையில் அவர் கிடந்தபோது பீரோவை உடைத்து உள்ளே இருந்த சுமார் 12 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தையும் கொள்ளயடித்த அந்த கும்பல் தலைமறைவானது.
பொதுமக்கள் மறியல்
இன்று காலை அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் தொடங்கியதும் இந்த கொடூரத்தை கண்டு கொதித்தெழுந்த உள்ளூர்வாசிகள் சலேடா-ரங்கத் ரெயில் பாதையையொட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டதையடுத்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் அனுமதி
சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த மாவட்ட மாஜிஸ்திரேட் குற்றம் நிகழ்ந்த இடத்தை நேரில் பார்வையிட்டார். இந்த கொடூர தாக்குதலுக்கு மேற்கு வங்காளம் மாநில நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் பிர்ஹட் ஹகிம், கல்வித்துறை மந்திரி பார்தா சாட்டர்ஜி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்" என்றார்.
எதிர்க்கட்சிகள் கண்டனம்
இந்த சம்பவத்துக்கு மாநிலத்தின் எதிர்க்கட்சிகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளன.
சிஐடி விசாரணை:
71 வயது கன்னியாஸ்திரி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸ் சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வரும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும், கொல்கத்தா பேராயர் தாமஸ் டி சோசாவிடம் சம்பவம் தொடர்பாக பேசியுள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் தளத்தில், "ரனாகாட்டில் நடந்த கோர சம்பவம் தொடர்பாக சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications