அன்று மம்தாவின் வலது கரம்; இன்று பாஜகவின் நிழல்.. மம்தாவை எதிர்த்து சுவேந்து அதிகாரி போட்டி!
கொல்கத்தா: மேற்கு வங்க தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 57 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து சமீபத்தில் திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியமான சுவேந்து அதிகாரி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முடிந்தால் நந்திகிராமில் போட்டியிடுங்கள் என்று மம்தாவுக்கு சுவேந்து அதிகாரி சவால் விட்டார். அந்த சவாலை ஏற்று மம்தாவும் நந்திகிராம் போட்டியிடுவதால் தேர்தல் களம் மிகவும் சூடுபிடித்துள்ளது.

மேற்கு வங்க தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது
தமிழகத்தைப்போல் மேற்கு வங்க தேர்தல் களமும் சூடுபிடித்துள்ளது. அங்கு இந்த முறை ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்பது பாஜகவின் நீண்ட நாள் சபதம். இதற்கு பல முன்பே திட்டம் வகுத்து விட்டார் அமித்ஷா. இதற்காக திரிணாமுல் கட்சியின் கூடாரத்தில் இருந்து ஒவ்வொருவராக பாஜக பக்கம் கொண்டு வந்தார். மம்தாவின் வலது கரமாக விளங்கிய சுவேந்து அதிகாரி உள்பட பல மூத்த தலைவர்கள் அமித்ஷா சொல் கேட்கும் கிளிப்பிள்ளையாக அப்படியே பாஜக பக்கம் ஒதுங்கினர்.

பாஜக-திரிணாமுல் விறுவிறு போட்டி
தொடர்ந்து பிரதமர் மோடி, அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா என்று மொத்த பாஜக அணியே மேற்கு வங்கத்தில் வலம் வந்தது. ஆனால் தான் எதற்கும் சளைத்தளவர் அல்ல என்பதை மம்தா நிரூபித்தார். பாஜகவுக்கு எதிராகவும், தனது கட்சியில் இருந்து சென்றவர்களுக்கு எதிராகவும் வீறு கொண்டு முழங்கினார் மம்தா. கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி மற்றும் சில பிரபல பெங்காலி நடிகர்களை தன்பக்கம் இழுத்துக் கொண்டார்.

பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு 291 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை மம்தா பானர்ஜி நேற்று அறிவித்தார். மம்தாவின் வலதுகரமாக இருந்து கருத்து வேறுபாட்டால் தற்போது பாஜக பக்கம் ஒதுங்கி இருக்கும் சுவேந்து அதிகாரியின் சவாலை ஏற்று நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் மம்தா. இந்த நிலையில் மேற்கு வங்க தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 57 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

மேற்கு வங்கம் ஆவலுடன் உள்ளது
நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து சமீபத்தில் திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியமான சுவேந்து அதிகாரி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.முடிந்தால் நந்திகிராமில் போட்டியிடுங்கள் என்று மம்தாவுக்கு சுவேந்து அதிகாரி சவால் விட்டார். அந்த சவாலை ஏற்று மம்தாவும் நந்திகிராம் போட்டியிடுவதால் தேர்தல் களம் மிகவும் சூடுபிடித்துள்ளது. மம்தாவும், சுவேந்துவும் ஒருவரையொருவர் பிரசாரம் செய்வதை பார்க்க மேற்கு வங்கமே ஆவலுடன் உள்ளது.மொய்னா சட்டமன்றத் தொகுதியில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அசோக் திண்டா போட்டியிடுகிறார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications