அடுத்த பிரச்சினை.. மம்தா கட்சியினரால்.. பாஜக பெண் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்டதாக கதறி அழுத தலைவி
கொல்கத்தா: மணிப்பூரை போல் மேற்கு வங்காளத்தில் பாஜக பெண் வேட்பாளரை நிர்வாணமாக்கி மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இழுத்து சென்ற சம்பவம் நடந்துள்ளதாக ‛தாமரை' கட்சியின் பெண் எம்பி கதறி அழுத சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மணிப்பூரில் குக்கி பழங்குடியினர் மற்றும் மைத்தேயி பிரிவு மக்கள் இடையே கடந்த மே மாதம் 3ம் தேதி முதல் மோதல் இருந்து வருகிறது. இந்த மோதல் பல இடங்களில் வன்முறையாக மாறியது. வீடுகள், கடைகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதில் 150க்கும் அதிகமானவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த வன்முறையின்போது கடந்த மே மாதம் 4ம் தேதி பைனோம் கிராமத்தில் 2 குக்கி பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியானது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மணிப்பூர் கலவரம் குறித்து எதுவும் பேசாத பிரதமர் மோடியே இந்த சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று பிரதமர் மோடி, ‛‛ ‛‛மணிப்பூர் சம்பவம் வெட்கக்கேடானது. இந்த சம்பவத்தால் என் இதயம் வலிக்கிறது. இதயத்தில் கோபம் நிரம்பி வழிகிறது. இந்த சம்பவத்தில் எந்த குற்றவாளியும் தப்பிக்க மாட்டார்கள் என உறுதியளிக்கிறேன். சட்டம் முழுவலிமையுடன் தனது கடமையை செய்யும். மணிப்பூர் மகளுக்கு நடந்த சம்பவத்தை ஒருபோதும் மன்னிக்க முடியாது'' என தெரிவித்தார்.
இந்நிலையில் தான் தற்போது மேற்கு வங்காளத்தில் பாஜக வேட்பாளர் ஒருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு இழுத்து செல்லப்பட்டதாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது சமீபத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் சமயத்தில் தான் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டம் தக்சின் பஞ்ச்லா பகுதியில் கடந்த 8 ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அப்போது பாஜக பெண் வேட்பாளர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் துன்புறுத்தப்பட்டுள்ளார். அதாவது மணிப்பூரை போல் பாஜக பெண் வேட்பாளர் நிர்வாணமாக்கி ஊர்வலம் அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், போலீசில் புகார் செய்தார். அதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஹிமந்தா ராய் சிலருடன் சேர்ந்து வாக்குச்சாவடியில் என்னை தாக்கினர். மார்பு மற்றும் தலையில் கட்டையால் தாக்கி வெளியே தள்ளினர். இந்த வேளையில் ஹிமந்தா ராய் கூறியதன் பேரில் அலி ஷேக், சுக்மல் பஞ்சா ஆகியோர் சேலை, உள்ளாடைகளை கிழித்து நிர்வாணமாக்கி மற்றவர்களின் முன்னிலையில் பாலியல் தொல்லை கொடுத்தனர் என தெரிவித்து இருந்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி செய்திகள் பெரியளவில் வராத நிலையில் தற்போது மணிப்பூர் சம்பவம் சர்ச்சையை கிளப்பி உள்ளதால் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சம்பவம் குறித்து பாஜகவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளனர். இந் சம்பவம் குறித்து மேற்கு வங்க மாநில பாஜக எம்பி லாக்கெட் சட்டர்ஜி பகீர் தகவலை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
#WATCH | BJP MP Locket Chatterjee breaks down as she recounts an alleged incident of sexual assault by TMC workers of a BJP candidate during Panchayat polls on 8th July in Howrah district of West Bengal pic.twitter.com/45VdDGqDXi
— ANI (@ANI) July 21, 2023
மணிப்பூர் மகள்கள் இந்த நாட்டின் மகள்கள். அதேபோல் மேற்கு வங்க மாநிலத்தின் மகள்களும் இந்த நாட்டை சேர்ந்தவர்கள். மேற்கு வங்க மாநிலமும் இந்த நாட்டின் ஒரு பகுதியாக தான் இருக்கிறது. பிரதமர் மோடி அனைத்து மாநிலங்களிலும் இருக்கும் கடும் சட்டங்கள் பற்றி பேசுகிறார். மேற்கு வங்க மாநிலத்தின் பெண்கள் பற்றியும் யாராவது பேச வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்'' என அழுதார்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜூம்தாரும் பக்கத்தில் இருந்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛மணிப்பூர் சம்பவம் மிகவும் கொடுமையானது. இது வருத்தத்துக்குரியது. அதேவேளையில் பாஜக தொண்டர் ஒருவர் நிர்வாணமாக மேற்கு வங்காளத்தில் இழுத்து செல்லப்பட்டார். மணிப்பூர் சம்பவத்தை விட இது மோசமானது.
மேலும் மணிப்பூர் சம்பவத்துக்கும், மேற்கு வங்க மாநிலத்தின் சம்பவத்துக்கு வித்தியாசம் ஒன்று உள்ளது. மணிப்பூர் மாநில சம்பவத்துக்கு வீடியோ இருக்கிறது. ஆனால் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சம்பவத்துக்கு வீடியோ எதுவும் இல்லை. இதற்கு காரணம் முதல்வர் மம்தா பானர்ஜியின் போலீசார் வீடியோ பதிவு செய்ய அனுமதிக்கமாட்டார்கள்'' என குற்றம்சாட்டினார்.
-
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!











Click it and Unblock the Notifications