உருவாகிறதா 3வது அணி? குமாரசாமியை சந்தித்த மம்தா பானர்ஜி.. என்ன நடந்தது? உற்றுநோக்கும் காங்கிரஸ்!
கொல்கத்தா: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி சந்தித்துள்ளார். அந்த சந்திப்பின் போது, தேசிய அளவில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசித்ததாக குமாரசாமி தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், மத்தியில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சி தீவிரமாக பணியாற்றி வருகிறது. 2014ஆம் ஆண்டு முதல் மத்தியில் ஆட்சியமைத்துள்ள பாஜகவை வீழ்த்த, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
இருப்பினும் காங்கிரஸ் கட்சி இருக்கும் அணியில் இணைய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

வேகமெடுக்கும் மம்தா பானர்ஜி
அதுமட்டுமல்லாமல் தேசிய அளவில் மூன்றாவது அணியை உருவாக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு வரும் மம்தா பானர்ஜி, பாஜகவுக்கு எதிரான சித்தாந்தங்கள் கொண்ட கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு கொல்கத்தாவில் வைத்து உத்தர பிரதேச மாநில எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்தார்.

மூன்றாவது அணி?
இருவரும் காங்கிரஸ் இல்லாத கூட்டணியை அமைப்பது பற்றி விவாதித்ததோடு, பாஜக, காங்கிரஸ் கட்சியுடன் சமமான தூரத்தை பின்பற்ற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து ஒடிசா மாநிலத்துக்கு சென்ற மம்தா பானர்ஜி, பிஜூ ஜனதாதளம் கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக்கை சந்தித்தார். இருப்பினும் இந்த சந்திப்பின் போது மூன்றாவது அணி பற்றி பேசவில்லை என்று இரு தலைவர்கள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

குமாரசாமி - மம்தா பானர்ஜி சந்திப்பு
இந்த நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவருமான குமாரசாமி நேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கொல்கத்தாவின் காளிகாட்டில் உள்ள மம்தா பானர்ஜி இல்லத்துக்கு சென்ற குமாரசாமி, மம்தா பானர்ஜியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

குமாரசாமி ட்வீட்
இதுகுறித்து கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உடனான சந்திப்பின் போது கர்நாடகா சட்டமன்றத் தேர்தல், பஞ்சரத்னா யாத்திரையின் வெற்றி மற்றும் தேசிய அரசியல் உள்ளிட்டவை குறித்து பேசினோம். கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு மம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்ய வருவதாக தெரிவித்தார். அதேபோல் தேசிய அளவில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் இணைந்து செயல்பட வேண்டியது பற்றி ஆலோசனை நடத்தியதாக பதிவிட்டுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications