பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணம் செய்த மம்தா பானர்ஜி!
கொல்கத்தா: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஸ்கூட்டரில் ஸ்கூட்டரில் பயணம் செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது.
சாமானிய மக்கள் மீது பெட்ரோல், டீசல் விலையை ஏற்றி மோடி அரசு இந்த அளவுக்கு அழுத்தம் கொடுப்பதாக அவர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல், விலை கடுமையாக அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை சதத்தை கடந்து விட்டது.

சதமடித்த பெட்ரோல் விலை
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல், விலை கடுமையாக அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை சதத்தை கடந்து விட்டது. இது போதாதென்று சமையல் கியாஸ் விலையும் அதிகரித்து மக்களை பாடாய்படுத்தி வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

பல்வேறு இடங்களில் போராட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தின. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் செய்த தவறால்தான் பெட்ரோல், டீசல் விலை உயர காரணம் என்று பாஜக கூறியுள்ளது.

எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணித்த மம்தா
இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணம் செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது. இன்று காலை அவர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் நபாரா நோக்கி சென்றார். மேற்கு வங்க நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சரும், கொல்கத்தா மேயருமான ஃபிர்ஹாத் ஹக்கீம் ஸ்கூட்டரை ஓட்ட மம்தா பானர்ஜி அதில் அமர்ந்து பயணம் செய்வதுபோல் இந்த வீடியோ அமைந்துள்ளது.

பிரதமர் மோடி தாக்கு
சிக்னலில் ஸ்கூட்டர் நிற்கும்போது போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகின்றனர். இந்த ஸ்கூட்டருக்கு பின்னால் பலரும் பின் தொடர்ந்து செல்கின்றனர். எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் நபாராவை அடைந்த மம்தா பானர்ஜி சாமானிய மக்கள் மீது பெட்ரோல், டீசல் விலையை ஏற்றி மோடி அரசு இந்த அளவுக்கு அழுத்தம் கொடுப்பதாக தெரிவித்தார். மம்தா பானர்ஜி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணம் செய்வது இதுவே முதன்முறையாகும்.
-
பூமிக்கு அடியில் ஒளிந்திருக்கும் பொக்கிஷம்.. இந்தியாவை மாற்றப்போகும்.. மோடியின் மெகா திட்டம் -
நிலைமை கையை மீறிப்போகுது! இன்றும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! சென்னையில் புதிய உச்சம்! -
மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. உங்களின் 1 வருட பட்ஜெட்டையே காலி செய்யும்.. எப்படி தெரியுமா? -
பட்ஜெட்டில் துண்டு போடும் பெட்ரோல் விலை.. இந்தியாவிலேயே உச்சம் எங்கு தெரியுமா? சென்னைக்கு எந்த இடம் -
திணறும் மத்திய அரசு! 1 மணிநேரத்திற்கு ரூ.25 கோடி இழப்பு.. பெட்ரோல், டீசல் விலையை 4 முறை உயர்த்தியும் இப்படி! -
“ரூ.10 எக்ஸ்ட்ரா கொடுக்க வேண்டியிருக்கும்..” பெட்ரோல் விலை குறித்து வாயை விட்ட நிர்மலா சீதாராமன் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications