"ஒரு பெண்ணை இகழ்ந்துவிட்டு..." மமதாவை கிண்டல் செய்த மோடி.. விளாசிய டெரிக் ஓ பிரைன்.. விமர்சனம்!

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ள நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரைன் பிரதமர் மோடியை விமர்சனம் செய்துள்ளார்.

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. கடந்த சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வென்ற இடங்களை விட இந்த தேர்தலில் கூடுதல் இடங்களை அக்கட்சி வெல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2016 சட்டசபை தேர்தலில் திரிணாமுல் 211 இடங்களில் வென்ற நிலையில் இந்த முறை 214 இடங்களில் திரிணாமுல் வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. பாஜக 75 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

திரிணாமுல்

திரிணாமுல்

இந்த மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்காக பிரதமர் மோடி கடந்த ஒரு மாதமாக தீவிரமாக பிரச்சாரம் செய்தார். 8 கட்ட சட்டசபை தேர்தல் என்பதால், கொஞ்சம் கூட பிரேக் விடாமல் வரிசையாக பிரதமர் மோடி இங்கு பிரச்சார கூட்டங்களை நடத்தினார். கொரோனா கேஸ்கள் உயர்வதற்கு இடையிலும் பிரதமர் மோடி வங்க தேர்தலில் கவனம் செலுத்தியது விமர்சனங்களை சந்தித்தது.

விமர்சனம்

விமர்சனம்

அதிலும் பிரதமர் மோடி தனது பிரச்சாரங்களில் எல்லாம் மமதாவை கிண்டல் செய்ததும் வைரலானது. தீதி ஓ தீதி என்று மோடி பல மேடைகளில் பேசினார். கிண்டலான தொனியில் மமதாவை அவமானப்படுத்தும் வகையில் மோடி இப்படி பேசினார். அதோடு மமதாவின் காலில் ஏற்பட்ட காயத்தையும் பல மேடைகளில் கிண்டலாக பேசினார்.

விரும்பவில்லை

விரும்பவில்லை

ஒரு கட்டத்திற்கு மேல் மேற்கு வங்க மக்களே இதை கொஞ்சம்கூட விரும்பவில்லை. ஆரம்ப கட்ட பிரச்சாரங்களுக்கு பின் இது பாஜகவிற்கு எதிராக திரும்ப தொடங்கியது. இந்த நிலையில் தற்போது இதை பற்றி திரிணாமுல் காங்கிரஸ் மூத்த உறுப்பினர் மற்றும் ராஜ்ய சபா எம்பி டெரிக் ஓ பிரைன் விமர்சனம் செய்து உள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்ற நிலையில் டெரிக் அதை பற்றி டிவிட் செய்துள்ளார்.

டிவிட்

அதில், எங்கள் மாநிலத்தில் ஒரு பெண்ணை நீங்கள் இகழ்ந்து பேச கூடாது மோடி.. எங்கேயும் எப்போதும் ஒரு பெண்ணை நீங்கள் இகழ்ந்து பேச கூடாது என்று டெரிக் குறிப்பிட்டுள்ளார். மமதாவை மோடி கிண்டல் செய்யும் வீடியோவையும் டெரிக் பகிர்ந்து உள்ளார்.

வெற்றி

வெற்றி

அதோடு, மமதாவின் இந்த வெற்றி என்பது.. மோடி, அமித் ஷா, பாஜக, சிபிஐ, ஈடி, தேர்தல் ஆணையம், மீடியா, துரோகிகள் ஆகியோருக்கு எதிரான வெற்றி. வங்காள மக்களும், மமதாவும், திரிணாமுல் காங்கிரஸ் சேர்ந்து பெற்ற வெற்றி இது என்று டெரிக் தனது டிவிட்டில் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+