For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேற்கு வங்க தேர்தல்.. மீண்டும் ஆட்சி அமைக்கும் திரிணாமுல்.. 215 இடங்களில் முன்னிலை.. பாஜகவிற்கு 75!

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் தற்போது வரை எண்ணப்பட்டுள்ள வாக்குகளில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. திரிணாமுல் 215; பாஜக 75 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதன் மூலம் மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வருகிறது.

Recommended Video

    West Bengal-ல் முன்னிலை பெரும் திரிணாமுல் காங்கிரஸ்.. பாஜகவுக்கு பின்னடைவு

    மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு மாதமாக திருவிழா போல மேற்கு வாங்க தேர்தல் நடைபெற்று வந்தது. மொத்தம் 8 கட்டமாக இங்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

    West Bengal election Result 2021: Tough fight between Trinamool Congress and BJP in Bangla

    மேற்கு வங்க தேர்தல் மற்ற மாநில தேர்தல்களை விட தேசிய அளவில் அதிக முக்கியத்துவம் பெற்றது. பாஜக முதல்முறையாக இங்கு கால் பதிக்கும் திட்டத்தில் இருந்தது. அதே சமயம் மீண்டும் ஆட்சி பொறுப்பில் அமரும் முனைப்பில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மமதா பானர்ஜி தீவிரமாக இருந்தார்.

    இதனால் மேற்கு வங்க தேர்தல் களமே கடந்த ஒரு மாதமாக சூடாக இருந்தது. அதோடு மற்ற மாநில தேர்தல்களை விட பிரதமர் மோடி மேற்கு வங்க தேர்தலில் அதிக கவனம் செலுத்தினார். மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு மொத்தம் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த மார்ச் 27ம் தேதி முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது.

    நெருக்கடி காலத்தில் சிஎம் ஆகுறீங்க.. கேர்ஃபுல் - ஸ்டாலினுக்கு 'அட்வைஸ்' வாழ்த்து அனுப்பிய கமல் நெருக்கடி காலத்தில் சிஎம் ஆகுறீங்க.. கேர்ஃபுல் - ஸ்டாலினுக்கு 'அட்வைஸ்' வாழ்த்து அனுப்பிய கமல்

    மேற்கு வங்கத்தில் மொத்தம் 108 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதில் 292 தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 256 கம்பெனி பாதுகாப்பு படைகள் களமிறக்கப்பட்டுள்ளன. 23 மாவட்டங்களில் வாக்குகள் எண்ணப்படுகிறது.

    மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி, பாஜக கூட்டணி, இடதுசாரிகள் - காங்கிரஸ் கூட்டணி களமிறங்கி உள்ளன. எக்சிட் போல் முடிவுகள் எதிலும் உறுதியாக எந்த கட்சி மேற்கு வங்கத்தில் வெற்றிபெறும் என்று கூறாத நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

    தற்போது வரை எண்ணப்பட்டுள்ள வாக்குகளில் திரிணாமுல் 215; பாஜக 75இடங்களிலும், இடதுசாரிகள் - காங்கிரஸ் கூட்டணி 1 இடத்திலும் முன்னிலை வகித்து வருகின்றன. இதன் மூலம் மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வருகிறது.

    நந்திகிராம் தொகுதியில் பாஜகவின் சுவேண்டு அதிகாரியிடம் முதல்வர் மமதா பானர்ஜி தோல்வி அடைந்தாலும், எம்எல்ஏ ஆகாமல் முதல்வராக மமதா பானர்ஜி பதவி ஏற்கும் முடிவில் உள்ளார். கடந்த 2016 தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 211 இடங்களில் வென்ற நிலையில் இந்த வருடம் அதைவிட 4 தொகுதிகளை கூடுதலாக பெறுகிறது. மீண்டும் திரிணாமுல் இதன் மூலம் வங்கத்தில் ஆட்சி அமைகிறது.

    நிலவரம்

    திரிணாமுல் காங்கிரஸ் - 215 இடங்களில் முன்னிலை - 213 வெற்றி உறுதி
    பாஜக - 75 இடங்களில் முன்னிலை - 73 வெற்றி உறுதி
    இடதுசாரிகள் காங்கிரஸ் கூட்டணி - 1 இடத்தில் வெற்றி உறுதி

    English summary
    West Bengal election Result 2021: Tough fight between Trinamool Congress and BJP in Bangla state.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X