க்ளீன் ஸ்வீப் மம்தா.. மேற்கு வங்கத்தில் கியர் எடுக்காத பாஜக.. காங். எங்கே? ஜன்மத் எக்சிட் போல்ஸ்
கொல்கத்தா: மேற்கு வங்கத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 29) நிறைவடைந்துள்ள நிலையில், 'ஜன்மத் போல்ஸ்' (Janmat Polls) வெளியிட்டுள்ள எக்சிட் போல் முடிவுகள் மம்தா பானர்ஜிக்கும் அவரது நிர்வாகிகளுக்கும் நிம்மதி கொடுப்பதாக அமைந்துள்ளன. மற்ற பல நிறுவனங்கள் பாஜகவுக்கு ஆதரவாகக் கணித்துள்ள நிலையில், ஜன்மத் மட்டும் மம்தா ஒரு இமாலய வெற்றியைப் பெறுவார் என்று கணித்துள்ளது.
மேற்கு வங்கத்தின் 294 தொகுதிகளுக்கும் தேர்தல் திருவிழா முடிவுக்கு வந்துள்ளது.. கடந்த வாரம் அங்கு முதலாம் கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இப்போது 2ம் கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. இதற்கிடையே இன்று எக்சிட் போல் முடிவுகள் அனலைக் கிளப்புகின்றன. பாஜகவுக்குச் சாதகமான பல கணிப்புகளுக்கு மத்தியில், 'ஜன்மத் போல்ஸ்' வெளியிட்டுள்ள முடிவுகள் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களைக் குஷியில் ஆழ்த்தியுள்ளன.

ஆட்சியைப் பிடிக்கத் தேவையான 148 இடங்களை விட மிக அதிகமான இடங்களை மம்தா பானர்ஜி கைப்பற்றுவார் என இந்தக் கணிப்பு கூறுகிறது.
திரிணாமுல் காங்கிரஸ்: 195 - 205 இடங்கள்
பாஜக : 80 - 90 இடங்கள்
காங்கிரஸ்: 01 - 03 இடங்கள்
இடதுசாரிகள் (LEFT): 00 - 01 இடங்கள்
இதர கட்சிகள் (OTH): 03 - 05 இடங்கள்
இந்தக் கணிப்பின்படி பார்த்தால், 2021 தேர்தலைப் போலவே இந்த முறையும் 200 இடங்களை நெருங்கி மம்தா பானர்ஜி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்யப்போகிறார் எனத் தெரிகிறது.
மேற்கு வங்கத் தேர்தல் களம் இப்போது இரண்டு துருவங்களாகப் பிரிந்து நிற்கிறது. மேட்ரைஸ், பி-மார்க் போன்ற நிறுவனங்கள் பாஜக-வுக்கு ஆதரவாகக் கூறினாலும், ஜன்மத் போல்ஸ் மற்றும் பீப்பிள்ஸ் பல்ஸ் போன்றவை மம்தாவுக்கு ஆதரவாக நிற்கின்றன. 15 ஆண்டுக்காலம் ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும் போது எதிர்ப்பு இருக்கவே செய்யும். ஆனால், அதையும் தாண்டி வெல்வது சாதாரண காரியமல்ல. இருப்பினும், இது எக்சிட் போல் தான்.. ரியல் முடிவுகள் மே 4ம் தேதி தான் தெரிய வரும்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications