மம்தா ஆட்சி கலைக்கப்படுகிறதா? டெல்லிக்கு விரைந்த ஆளுநர்.. ரெடியாகும் அமித் ஷா.. இன்று முக்கிய முடிவு
கொல்கத்தா: கொல்கத்தா வன்புணர்வு மற்றும் கொலைக்கு எதிரான போராட்டங்களுக்கு இடையே மேற்கு வங்கஆளுநர் சிவி ஆனந்த போஸ் டெல்லி சென்றுள்ளார். அவர் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆகியோரை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று மாலை அவர் புறப்படுவதற்கு முன், போஸ் சில பெண் மருத்துவர்களை ராஜ்பவனில் சந்தித்து, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று உறுதியளித்தார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து ஜனாதிபதி திரௌபதி முர்முவை போஸ் சந்திக்கப் போகிறார் என்று தகவல்கள் வருகின்றன. இந்த ஊகங்களுக்கு ராஜ் பவன் பதிலளிக்கவில்லை.

மேற்கு வங்க அரசுக்கு எதிராக உள்துறை அமைச்சகத்திடம் பாஸ் ரிப்போர்ட் அளிப்பார் அல்லது ஆட்சிக்கு எதிராக குடியரசுத் தலைவரிடம் ரிப்போர்ட் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு வங்க கவர்னர் சி.வி.ஆனந்த போஸ், ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முதுகலை பயிற்சி மருத்துவர் இறந்ததையடுத்து.. அங்கு நடந்த சம்பவங்களுக்கும், அதை தொடர்ந்து நடந்த கலவரத்திக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
போராட்டங்கள்: கொல்கத்தா மருத்துவர் பலாத்காரம் மற்றும் கொலையை தொடர்ந்து அங்கே பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மக்கள் தன்னெழுச்சியாக வந்து அங்கே போராடி வருகின்றனர்.
கொல்கத்தாவில் நடந்த பலாத்காரம் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் நடந்த நிர்பயா சம்பவத்திற்கு இணையாக மிகப்பெரிய கொடூரம் கொல்கத்தாவில் நடந்து உள்ளது. நேற்று பெங்களூர், டெல்லி, மும்பை, புனே தொடங்கி நாடு முழுக்க சுதந்திர தின இரவுக்கு முன் பெண்கள் , ஆண்கள் இதை எதிர்த்து கூட்டம் கூட்டமாக போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். கொல்கத்தா மக்கள் இடையே அதீத கோபத்தை ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவம் அங்கே மம்தா அரசுக்கு எதிராகவும் திரும்பி உள்ளது.
கொல்கத்தாவில் மருத்துவரை பலாத்காரம் செய்து கொன்ற குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 33 வயதான சஞ்சோய் ராய் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராயின் கடந்தகால நடத்தை, முந்தைய திருமண வாழ்க்கையில் மனைவியை கொடுமை செய்தது மற்றும் ஆபாச வீடியோக்கள் பார்த்தது ஆகியவை அவருக்கு மனநல ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம் என்கிறார்கள்.
இவர் அங்கே தன்னார்வலராக போலீஸார் உடன் இணைந்து செயல்பட்டு உள்ளார். இவர் வெறும் தன்னார்வலர்தான். ஆனால் போலீஸ் குழுக்களில் இருக்கிறார், அங்கே கிடைத்த காண்டாக்ட் மூலம் போலீஸ் கமிட்டி ஒன்றிலும் கூட கமிட்டி உறுப்பினராக இருக்கிறார்.
கிழிந்த புளூடூத் இயர்போன் உள்ளிட்ட ஆதாரங்கள் மூலம் போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர். இவர் அந்த பளூடூத் ஹெட் செட் உடன் அங்கே சுற்றியதை பலரும் பார்த்து உள்ளனர். இதன் மூலமே அவர் சிக்கி உள்ளார். மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகளுடனான தொடர்பு காரணமாக ராய் பல்வேறு மருத்துவமனை துறைகளுக்கு சென்று பல்வேறு பணிகளை செய்துள்ளார். இது போன்ற ஒரு வாய்ப்பிற்காக அவர் இத்தனை காலம் காத்து இருந்ததாக கூறப்படுகிறது.
வாக்குமூலம்: கொல்கத்தாவில் மருத்துவரை பலாத்காரம் செய்து கொன்ற நபர், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அதோடு அதிர்ச்சி தரும் வாக்குமூலத்தை கொடுத்துள்ளார்.
சிபிஐயிடம் அவர் தந்த வாக்குமூலத்தில், நான் மட்டும்தான் குற்றத்தை தனியாக செய்தேன். நான்தான் குற்றவாளி. நான் செய்ததை சரி என்றெல்லாம் சொல்ல மாட்டேன். நான்தான் தவறு செய்தேன்.. என்னை தூக்கில் போடுங்கள். என்னை தூக்கில் போட்டாலும் தவறுன்னு சொல்ல மாட்டேன். எனக்கு பிரச்சனை இல்லை, என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
ராய் தனது தாய், சகோதரி மற்றும் மனைவியிடம் முன்பு இதேபோல் வன்முறையாக நடந்துகொண்டதையும் ஒப்புக்கொண்டார். ராயின் மாமியார் தனது மகளை ராய் உடல் ரீதியாக துன்புறுத்தியதாக காளிகாட் காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக முன்பு புகார் அளித்ததாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications