மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல்: சாவு பயம் காட்டிய பாஜக.. ரத்த சகதியில் வென்ற மமதா பானர்ஜி கட்சி!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில உள்ளாட்சித் தேர்தல் வரலாறு காணாத வன்முறைகளுக்கு நடுவே முதல்வர் மமதா பானர்ஜி மற்றும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அமோக வெற்றியை கொடுத்திருக்கிறது. ஆனால் இந்த வெற்றிக்கு மமதா கட்சி தந்திருக்கும் விலை, இனி வரும் சட்டசபை- லோக்சபா தேர்தல்களின் உக்கிரத்தை, கடும் போட்டியை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி காட்டுகிறது.

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல் ஒரு பார்வை:
மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெற்ற உள்ளாட்சி இடங்கள்
கிராம பஞ்சாயத்துகள் 3,317
22 ஜில்லா பரிஷத்துகளில் 928 இடங்கள்
9,730 பஞ்சாயத்து சமிதி இடங்கள்
63,239 வார்டு உறுப்பினர்கள்
தேர்தல் நடைபெற்ற மொத்த இடங்கள்: 73,887
மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள்
மொத்த வேட்பாளர்கள்: 2,36,464
திரிணாமுல் காங்கிரஸ் 85,817
பாஜக 56,321
மார்க்சிஸ்ட் கட்சி 48,646
காங்கிரஸ் 17,750
மொத்த வாக்காள்ர்கள்: 5.60 கோடி
இன்றைய வாக்கு எண்ணிக்கையில் மாலை 5 மணி நிலவரம்:
கிராம பஞ்சாயத்துகள் (63,239)
திரிணாமுல் காங்கிரஸ்: வெற்றி-6593 ; முன்னிலை 3070 மொத்தம் 9663
பாஜக- வெற்றி-1251; முன்னிலை 768 மொத்தம் 2019
சிபிஎம்- வெற்றி- 437; முன்னிலை572 மொத்தம் 1009
காங்கிரஸ் வெற்றி- 213; முன்னிலை 213 மொத்தம் 461
மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது நடைபெற்று முடிவடைந்த உள்ளாட்சித் தேர்தல், ஒரு சட்டசபை தேர்தல் அல்லது லோக்சபா தேர்தல் போல அத்தனை களேபரங்கள், வன்முறைகள், படுகொலைகளை எதிர்கொண்டிருக்கிறது. தேர்தல் பிரசாரம் தொடங்கி வாக்கு எண்ணிக்கை வரையில் ஆகப் பெரும் வன்முறையை மேற்கு வங்கம் சந்தித்து கொண்டிருக்கிறது. மேற்கு வங்கத்தில் ஆளுநர் ஏற்கனவே மாநில அரசுடன் மோதல் போக்கை கடைபிடிப்பவர். இப்போது சும்மா இருந்துவிடுவாரா என்ன? களத்தில் இறங்கி வாக்கு எண்ணிக்கையை ஆய்வு செய்கிறார்; வன்முறையாளர்களுக்கு பகிரங்க எச்சரிக்கையை பிரஸ் மீட்டை கூட்டி விடுக்கிறார். இத்தனைக்கும் நடுவே மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் மமதாவின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிக் கொடியை பறக்கவிட்டிருக்கிறது.
மமதா வெற்றியின் பின்னணி: மேற்கு வங்க மாநிலமானது இடதுசாரிகளின் கோட்டையாக இருந்தது. எந்த தேர்தல் நடந்தாலும் இடதுசாரிகள் தொடர்ந்து வென்ற மாநிலமாக இருந்தது மேற்கு வங்கம். பாஜக உருவாகாத அல்லது கால் வைக்காத காலத்தில் இடதுசாரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது காங்கிரஸ். 1980களில் காங்கிரஸின் இளம் தலைவராக களமாடியவர்தான் இன்றைய திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான மமதா பானர்ஜி. காங்கிரஸை தூக்கி எறிந்துவிட்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தொடங்கி இடதுசாரிகளை மமதாவால் வீழ்த்த முடிகிறது; இடதுசாரிகளின் கோட்டையில் அவர்களை இல்லாது ஒழிக்க முடிகிறது; என்னதான் மத்தியில் பாஜக ஆட்சி செய்து அடக்குமுறைகளை ஏவினாலும் மமதா பானர்ஜியை அசைக்க முடியாமல் இருக்கிறது எனில் அவருக்கான மக்கள் செல்வாக்கு என்பது மட்டுமே முக்கியமானது அல்ல. மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பு மிக முக்கியமானது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தை இழந்த இடதுசாரிகள் தங்களது ஒட்டுமொத்த இருப்பையே தொலைத்தார்கள்; இடதுசாரிகள் காவிகளாக உருமாறிய வினோதமும் நிகழ்ந்தது. மமதாவை பிடிக்காத காங்கிரஸ் கட்சியினர் எஞ்சியிருந்தனர். இத்தனை ஆண்டுகாலம் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கு வங்க அரசியலில் தனிக்காட்டு ராஜாவாக களமாடி வரும் மமதாவுக்கு கட்சி கட்டமைப்பை/ கட்சி அடித்தளத்தை வலுவாக கட்டமைப்பதை கற்றுத்தரவா வேண்டும்.. அதைத்தான் மமதா இத்தனை ஆண்டுகாலமும் அதிகாரத்தில் இருந்த போதும் செய்தார்.. செய்து கொண்டே இருக்கிறார். பட்டி தொட்டி எங்கும் ஒரு வாக்குச் சாவடி கூட விடாமல் மமதாவின் திரிணாமுல் காங்கிரஸ் செல்வாக்கு செலுத்துவதால்தான் பாஜகவை விட 30, 000 வேட்பாளர்களை கூடுதலாக களத்தில் இறக்கிவிட்டிருக்கிறார். இடதுசாரிகள்- காங்கிரஸ் கூட்டணியைவிட 20,000 வேட்பாளர்களை கூடுதலாக களமிறக்கி இருக்கிறார் மமதா. இதனாலேயே இந்த உள்ளாட்சித் தேர்தலில் மமதா பானர்ஜி கட்சி எளிதான மாஸ் வெற்றியை அறுவடை செய்து கொண்டிருக்கிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கு சமபலம் கொண்ட கட்சியாக உருவெடுப்பதில் எதிர்க்கட்சியான பாஜக படுதீவிரம் காட்டுகிறது. இதனாலேயே மேற்கு வங்க மாநிலம் ஒவ்வொரு தேர்தலிலும் வன்முறைகளை சந்திக்கவும் நேரிடுகிறது. பாஜகவின் ஒவ்வொரு நகர்வுக்கும் எதிராக திரிணாமுல் காங்கிரஸ் ஒவ்வொரு இடத்திலும் எதிர்வினையாற்றுவதால் வன்முறைகள் இயல்பாகவே வெடித்து கொண்டிருக்கின்றன. ஆனால் இத்தகைய வன்முறைகள் சில மாவட்டங்களை பாஜகவின் கோட்டைகளாக உருமாற்றி மமதாவுக்கு எச்சரிக்கையையும் தந்து கொண்டிருக்கின்றன.
மேற்கு வங்க மாநிலத்தைப் பொறுத்தவரையில் அதிகாரத்தில் இருக்கும் கட்சிதான் உள்ளாட்சித் தேர்தலில் வெல்லும் என்பது பொது நியதி. இம்முறையும் அதுவே நிகழ்ந்துள்ளது. ஆனால் பெரும் போராட்டத்துக்கு இடையேதான் இந்த வெற்றியை மமதாவின் திரிணாமுல் காங்கிரஸ் அறுவடை செய்திருக்கிறது.
ஒரு உள்ளாட்சித் தேர்தலுக்கே இத்தனை வன்முறைகள்.. 50 பேரை பலி கொண்ட சம்பவங்கள் எனில் லோக்சபா தேர்தல் களம் இதைவிட உக்கிரமாகவே இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அதுவும் முன்னெப்போதையும்விட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து நிற்கும் தருணம்... 9 ஆண்டுகால பாஜக ஆட்சி குறித்த மக்கள் மனநிலை... பாஜகவினரே முந்தைய தேர்தலைப் போல இருக்காது என்கிற அச்சம்.. இவற்றுக்கு நடுவே நடைபெறும் லோக்சபா தேர்தலில் ஆக முடிந்தமட்டும் அதிகமான இடங்களை கைப்பற்ற திரிணாமுல் காங்கிரஸும் பாஜகவும் முயற்சிக்கும். அப்போது இதனைவிட மிக மோசமான பதற்றமும் ரத்த களறியும் இருக்கத்தான் செய்யும். என்னதான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மமதா வலுவான அடித்தளத்தை கட்டமைத்து கொடுத்திருந்தாலும் சமமான போட்டியை பாஜக, லோக்சபா தேர்தலில் - சட்டசபை தேர்தலில் தரக் கூடும் என்பதைத்தான் இப்போதைய தேர்தல் முடிவுகள் மட்டுமல்ல.. அந்த கட்சியின் ரத்தம் சிந்தும் போராட்டமும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications