தனி கோசல் மாநிலம் கோரி மேற்கு ஒடிஷாவில் 12 மணி நேர பந்த்!
சம்பல்பூர்: மேற்கு ஒடிஷாவில் 11 மாவட்டங்களை உள்ளடக்கி தனி கோசல் மாநிலம் அமைக்க வலியுறுத்தி நூற்றுக்கணக்கான அமைப்புகள் சார்பில் 12 மணி நேர முழு அடைப்புப் போராட்டம் இன்று நடத்தப்பட்டது.
ஒடிஷாவின் மேற்கு பகுதியில் சம்பல்பூர், ஜர்ஷ்குடா, பலாங்கிர், நுவபடா, சுந்தர்கார், பவுத், பர்கார், கலஹாண்டி, சோனேபுர் மற்றும் அங்குல் மாவட்டத்தின் அத்மல்லிக் பிரதேசம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து தனி கோசல் மாநிலம் அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை.
இந்த கோரிக்கைக்காக நூற்றுக்கணக்கான அமைப்புகள் ஒருங்கிணைந்து கோசல் மாநில ஒருங்கிணைப்புக் குழு என்ற கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டமைப்பின் சார்பில் தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி 12 மணி நேர முழு அடைப்புப் போராட்டம் இன்று நடைபெற்றது.
இன்றைய முழு அடைப்பின் போது பல இடங்களில் தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கோசல் கிராந்தி தள் என்ற இயக்கத்தின் பல இடங்களில் ரயில்களை மறித்து போராட்டம் நடத்தினர்.
இந்த முழு அடைப்புப் போராட்டத்தால் மேற்கு ஒடிஷாவில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications