கள்ள சந்தையில் படுஜோராக நடக்கும் எல்.பி.ஜி. சிலிண்டர் விற்பனை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நம் நாட்டில் 1 கோடியே 30 லட்சம் பேரிடம் போலி கேஸ் இணைப்புகள் உள்ளன.

பஹல் எனப்படும் பிரத்யக்ஷ் ஹஸ்தன்தரித் லாப் அதாவது நேரடி மானிய திட்டத்தின் மூலம் பயனாளிகளின் வங்கி கணக்கில் மானியத் தொகை நேரடியாக செலுத்தப்படுகிறது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு துவங்கிய இந்த திட்டத்தை தற்போது மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது.

மானியத் திட்டம் என்றாலே அது ஊழலும், முறைகேடுகளும் நிறைந்தவையாக உள்ளது. முன்னதாக மகாராஷ்டிரா மாநில அரசு 53 லட்சம் போலி ரேஷன் கார்டுகளை ரத்து செய்தது என்று இந்தியாஸ்பெண்ட் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

தாமதம்

தாமதம்

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டமும் தாமதமாகியதுடன் சரிவர செயல்படுவதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு

மத்திய அரசு

உணவு, எரிபொருள், உரம் உள்ளிட்டவைக்கு மானியம் பெறுபவர்களை கண்டுபிடித்து போலிகளை தவிர்க்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

எல்பிஜி

எல்பிஜி

இந்தியாவில் வீடுகளில் பயன்படுத்த மட்டும் 1 கோடியே 76 லட்சம் எல்.பி.ஜி. இணைப்புகளுக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிலும் தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுவை, லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களில் தான் அதிகமானோர் எல்.பி.ஜி. இணைப்புகளுக்கு பதிவு செய்துள்ளனர்.

போலி

போலி

14 எல்.பி.ஜி. கேஸ் இணைப்புகளில் ஒன்று போலி. அதாவது நாடு முழுவதும் 7 சதவீத கேஸ் இணைப்புகள் போலியானவை என்பது மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில் இருந்து தெரிய வந்துள்ளது.

உ.பி.

உ.பி.

நாட்டிலேயே உத்தர பிரதேசத்தில் தான் அதிகபட்சமாக 18 லட்சத்து 70 ஆயிரம் போலி இணைப்புகள் உள்ளன. இதையடுத்து மகாராஷ்டிராவில் 13 லட்சத்து 50 ஆயிரம், அஸ்ஸாமில் சுமார் 10 லட்சம் போலி இணைப்புகள் உள்ளன.

எண்ணெய் நிறுவனங்கள்

எண்ணெய் நிறுவனங்கள்

இந்தியன் ஆயில் கார்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் ஆகிய மூன்று முக்கிய பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் தான் கேஸ் இணைப்புகள் வழங்குகின்றன. அதில் இந்தியன் ஆயில் கார்பரேஷன் 66 லட்சத்து 30 ஆயிரம் போலி இணைப்புகளை துண்டித்துள்ளது.

பஹல்

பஹல்

ஒருவர் பல கேஸ் இணைப்புகள் வைத்திருப்பது மற்றும் போலியாக இணைப்புகள் பெறுவதை தடுக்க 2013ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது தான் பஹல் திட்டம் ஆகும். 291 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மறுசீரமைத்து வருகிறது.

மானியம்

மானியம்

பஹல் திட்டத்தின் மூலம் 1 கோடியே 22 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு ரூ.6 ஆயிரத்து 506 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

கேஸ்

கேஸ்

ராஜீவ் காந்தி கிராமின் எல்பிஜி விதாரன் யோஜனா திட்டம் மூலம் 2009ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலத்தில் நாட்டில் உள்ள 75 சதவீத மக்களுக்கு கேஸ் இணைப்பு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த பிப்ரவரி 1ம் தேதி வரை கிராமப்புறங்களில் 7 சவீதத்திற்கும் குறைவான மக்களே கேஸ் பயன்படுத்துகிறார்கள்.

கள்ள சந்தை

கள்ள சந்தை

எல்.பி.ஜி. சிலிண்டர்கள் கள்ள சந்தையில் விற்கப்படுவது, இணைப்புகள் வழங்குவதில் முறைகேடு நடப்பது அதிகரித்துவிட்டது. 2013-2014ம் ஆண்டில் 29 ஆயிரத்து 837 முறை அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. அந்த சோதனைகள் வட இந்தியாவில் நடத்தப்பட்டுள்ளது.

courtesy: இந்தியாஸ்பெண்ட்.காம்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+