3 சிக்கல்.. 4 குட்நியூஸ்.. பார்டர் கவாஸ்கர் முதல் டெஸ்ட்.. ஆஸியை சாய்க்க இந்தியாவின் சக்ர வியூகம்!
இந்திய அணிக்கு இருக்கும் முதல் சிக்கல் பிளேயிங் லெவன். பிளேயிங் லெவனில் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் இல்லாத காரணத்தால் பெரிய வெற்றிடம் ஏற்பட்டு இருக்கிறது.
நாக்பூர்: இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.
நாக்பூரில் நடக்கும் இந்த டெஸ்ட் ஆஸ்திரேலியாவிற்கு மிக முக்கியமான டெஸ்ட். வரிசையாக இரண்டு பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர்களை இந்தியாவிடம் ஆஸ்திரேலியா இழந்துவிட்டது. அதிலும் கடைசி தொடரில் கப்பாவில் அடி வாங்கியதை ஆஸ்திரேலியா மறக்கவே மறக்காது.
டெஸ்ட் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்திற்கு செல்லும் முனைப்பில் இருக்கும் இந்தியாவும் இந்த தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முக்கியமாக ரோஹித் சர்மா தலைமையிலான அணி ஆடுவதால் இந்த தொடர் இந்தியாவிற்கும் மிக முக்கியமானது ஆகும்.

வீரர்கள் யார் யார்?
இந்த தொடருக்காக இந்திய அணியில் இருந்து ரோஹித் சர்மா(கேட்ச்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, கேஎல் ராகுல், ஸ்ரீகர் பாரத்(வ), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், குல்தீப் யாதவ், சூர்யகுமார் யாதவ் , ஜெய்தேவ் உனட்கட், உமேஷ் யாதவ் ஆகியோர் தேர்வாகி உள்ளனர். ஆஸ்திரேலியாவில் டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி(வ), பாட் கம்மின்ஸ்(சி), நாதன் லியோன், ஸ்காட் போலண்ட், டோட் மர்பி, மிட்செல் ஸ்வெப்சன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஆஷ்டன் அகர், மிட்செல் ஸ்டார்க், மாட் ரென்ஷா , கேமரூன் கிரீன், லான்ஸ் மோரிஸ் ஆகியோர் தேர்வாகி உள்ளனர். இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணிக்கு இருக்கும் சாதக, பாதகங்களை பார்க்கலாம்.

சிக்கல் 1- பிளேயிங் லெவன்
இந்திய அணிக்கு இருக்கும் முதல் சிக்கல் பிளேயிங் லெவன். பிளேயிங் லெவனில் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் இல்லாத காரணத்தால் பெரிய வெற்றிடம் ஏற்பட்டு இருக்கிறது. இரண்டு பேருமே கடந்த 2 வருடமாக இந்தியாவிற்கு டெஸ்டில் சிறப்பாக ஆடி வந்த வீரர்கள். மீதம் இருக்கும் வீரர்களில் அணிக்குள் இடம் பிடிக்க போவது யார் என்ற குழப்பம் உள்ளது. உதாரணமாக மேட்சில் அஸ்வின் ஆடுவது உறுதி. இன்னொரு ஸ்பின் பவுலராக, ஜடேஜா பிட்னஸை நிரூபித்துவிட்டாலும் நன்றாக ஆடிக்கொண்டு இருக்கும் அக்ஸரை தூக்குவார்களா என்ற கேள்வி உள்ளது. ஆல் ரவுண்டர் வேண்டாம், கூடுதல் ஸ்பின் பவுலர் வேண்டும் என்று குல்தீப் யாதவை இறக்குவார்களா என்ற குழப்பம் உள்ளது.

சிக்கல் 2- காம்பினேஷன் குழப்பம்
அதேபோல் சூர்ய குமார் யாதவை எடுக்க போவதாகவும் பேச்சு உள்ளது. டி 20 போட்டியில் ஆடுகிறார் என்பதற்காக அவரை டெஸ்ட் போட்டியில் இறக்குவது சரியா என்ற கேள்வியும் உள்ளது. மேலும் கே. எல் ராகுல் அணிக்குள் வர இருக்கிறார். அவர் இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் நன்றாக ஆடிய ரெக்கார்ட் கொண்டவர். கே. எல் இறங்கினால், சுப்மான் கில் இறங்கும் இடம் என்ன? என்ற கேள்வி உள்ளது. பெரும்பாலும் ஆடும் இந்திய அணியில் ரோஹித் சர்மா(கேட்ச்), கே.எல் ராகுல், புஜாரா, விராட் கோலி, ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோர் ஆடும் வாய்ப்புகள் உள்ளன.

சிக்கல் 3- ஸ்மிட் - மார்னஸ் - வார்னர்
இந்தியாவிற்கு அணி காம்பினேஷன் சிக்கல் மட்டுமின்றி ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டரில் உள்ள 3 பேர் முக்கிய சவாலாக இருக்க போகின்றனர். ஸ்மித் நல்ல பார்மில் இருக்கிறார். பெரும்பாலும் வார்னர் ஆட கடைசி பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் இதுதான். அதேபோல் மார்னஸ் நல்ல பார்மில் இருக்கிறார். இவர்கள் மூன்று பேருமே தென்னாப்பிரிக்க தொடரிலும் நன்றாக ஆடினார்கள். அதனால் இவர்களை சமாளிக்க இந்திய அணி புதிய வியூகம் வகுக்க வேண்டும். ஸ்மித்தை கூட அஸ்வின் சமாளிப்பார் என்றாலும் மற்றவர்களை வீழ்த்த இந்திய அணி முக்கிய வியூகம் வகுக்க வேண்டும்.

குட்நியூஸ் 1 - அஸ்வின் - லெப்ட் ஹெவி
மற்றபடி இந்திய அணிக்கு இருக்கும் குட்நியூஸ் என்று பார்த்தால், ஆஸ்திரேலிய அணியில் டாப் ஆர்டரில் இடதுகை பேட்ஸ்மேன்ஸ்கள் நிறைய பேர் உள்ளனர். இதனால் அஸ்வினுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். அஸ்வின் பொதுவாக லெப்ட் ஹேண்ட் பேட்ஸ்மேன்கள் என்றால் எளிதாக விக்கெட் எடுப்பார். டெஸ்டில் அவர் எடுத்த அதிகம் விக்கெட்டுகள் லெப்ட் ஹேண்ட் பேட்ஸ்மேன்களிடம் இருந்துதான். அதனால் இந்திய அணியின் ஸ்பின் ரீதியாக சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.

குட்நியூஸ் 2 - பிட்ச்
இன்னொரு பக்கம் பிட்ச் இந்திய அணியின் ஸ்பின் பவுலர்களுக்கு சாதகமாக வடிவைமைக்கப்பட்டு உள்ளது. நாகபூர் பிட்ச் கியூரேட்டர் அபிஜீத் பிப்ரோடுடன் ராகுல் டிராவிட் இது தொடர்பாக பேசி இருக்கிறார். இதனால் பிட்சில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்றபடி பிட்சில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பிட்சில் குறைவான புற்கள் இருக்கும், பிட்ச் பெரும்பாலும் வறண்டு, பிளாட்டாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும்.

குட்நியூஸ் 3- கேமரூன் கிரீன்
ஆஸ்திரேலிய அணியில் கேமரூன் கிரீன் இடம்பெற வாய்ப்பு குறைவு.அவர் இடம்பெற்றாலும் பெரும்பாலும் பவுலிங் போட மாட்டார். இது இந்திய அணிக்கு கூடுதல் பலம் கொடுக்கும். ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டர் பவுலிங் போட வாய்ப்பு குறைவு என்று செய்திகள் வருகின்றன. இதனால் இந்திய அணி பெரிதாக ஆஸ்திரேலியாவின் ஆல் ரவுண்டர்களை பார்த்து அஞ்ச வேண்டியது இல்லை.

குட்நியூஸ் 4 - பாஸ்ட் பவுலர்ஸ்
ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க், ஹஸல்வுட் இருவரும் நாளை ஆட போவது இல்லை. இதனால் போலண்ட் களமிறங்க வாய்ப்பு உள்ளது. மற்றபடி பெரும்பாலும் ஆஸ்திரேலியாவும் ஸ்பின் பவுலர்களையே களமிறக்கும் என்பதால் இந்திய அணிக்கு ஆஸ்திரேலியாவின் பவுலிங் அவ்வளவு பிரஷர் கொடுக்கும் ஒன்றாக இருக்க போவது இல்லை என்றே எதிர்பார்க்கப்படுகிறது. நாதன் லயன், ஆஷ்டன் அகர் அல்லது டாட் மர்பி ஆகியோரை சமாளித்துவிட்டால் ஆஸ்திரேலிய பவுலிங்கை இந்திய அணி எளிதாக எதிர்கொள்ள முடியும்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications