அத்வானி, ஜெயலலிதா, அமித்ஷாவுக்காக திறமையாக வாதாடிய ராம்ஜேத்மலானி.. இதுவரை வாதிட்ட வழக்குகள் இதுதான்!
Subscribe to Oneindia Tamil
Recommended Video
Ram Jethmalani மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உடல்நலக்குறைவால் காலமானார்
டெல்லி: திறமைவாய்ந்த மூத்த வழக்கறிஞரான ராம்ஜேத்மலானி, அத்வானி, ஜெயலலிதா, அமித்ஷா, லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோருக்காக வாதாடியுள்ளார். இது வரை அவர் வாதிட்ட வழக்குகள் என்னென்ன?
பாகிஸ்தானில் பிறந்த ஜேத்மலானி, இந்தியா- பாகிஸ்தான் பிரிவினைக்கு பின்னர் மும்பை மாகாணத்தில் வசித்து வந்தார். மும்பையிலேயே வழக்கறிஞர் படிப்பை முடித்துவிட்டு திறமைவாய்ந்த வழக்கறிஞராக விளங்கினார். இந்த நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் வழக்கறிஞர் தொழிலில் இருந்து ஓய்வு பெற்றார்.

வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட ராம்ஜேத்மலானி டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை உயிர் பிரிந்தது. இது வரை அவர் வாதம் செய்த வழக்குகளின் பட்டியல் இதோ..
- ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 7 தமிழர்களுக்காக கடந்த 2011-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிட்டார்.
- இந்திரா கொலை குற்றவாளிகளுக்காக வாதிட்ட மலானி டோக்ரா குழு வழங்கிய மருத்துவ ஆதாரத்தை எதிர்த்து வாதம் செய்தார்.
- ஸ்டாக் மார்க்கெட் முறைகேட்டில் குற்றம்சாட்டப்பட்ட ஹர்ஷத் மேத்தா வழக்கில் வாதிட்டார்.
- அது போல் பங்கு சந்தை முறைகேட்டில் குற்றம்சாட்டப்பட்ட கேதான் பரேக்கிற்காக வாதம் செய்தார்.
- நிழல் உலக தாதா ஹாஜிமஸ்தான் வழக்கு
- எல் கே அத்வானியின் ஹவாலா மோசடி
- ஜெசிக்கா லால் கொலைவழக்கில் சிக்கிய மனு சர்மா
- சோரப்புதீன் போலி என்கவுன்ட் வழக்கில் அமித்ஷாவுக்கு ஆதரவாக வாதம் செய்தார்
- கனிமொழியின் 2ஜி வழக்கு
- ஒய் எஸ் ஜெகன்மோகன் ரெட்டியின் சிறப்பு விடுப்பு புகார் வழக்கு
- பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோின் தூக்கு தண்டனையை ரத்து செய்த வழக்கு
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ கிருஷ்ண தேசாய் கொலை வழக்கில் சிவசேனா கட்சிக்கு வாதம்
- ஜோத்பூர் பாலியல் பலாத்கார வழக்கில் அசாராம் பாபுவுக்காக வாதம்
- கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவிற்காக வாதம்
- சஹா வழக்கில் சுப்ரதா ராய்க்காக வாதம்
- ஜெயலலிதாவுக்காக சொத்து குவிப்பு வழக்கில் வாதம்
- அருண் ஜேட்லி தாக்கல் செய்த அவதூறு வழக்கில் ஆம் ஆத்மியின் தலைவர் அரவிந்த் கெஜரிவாலுக்காக வாதம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications