அந்த நொடி! காட்டுத்தனமான வேகம்.. கார் ஜன்னலை திறக்க போராடிய பண்ட்! வெளியான அதிர்ச்சி சிசிடிவி வீடியோ

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் காரில் வேகமாக சென்று விபத்தில் சிக்கிய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இவர் விபத்தில் சிக்கும் முன் காட்டுத்தனமான வேகத்தில் சென்றது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

முகத்தில் காயம்.. தலையில் ரத்த கட்டு.. முதுகு முழுக்க மோசமான காயங்கள் என்று ரிஷப் பண்ட் படுக்கையில் கிடக்கும் காட்சிகள் இணையத்தை உலுக்கி உள்ளன. உத்தரகாண்டில் வேகமாக காரில் சென்ற ரிஷப் பண்ட் இன்று அதிகாலை விபத்திற்கு உள்ளனார்.

ரிஷப் பண்ட் உத்தரகாண்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்று இருக்கிறார். வங்கதேசம் தொடர் முடிந்து டெல்லிக்கு இவர் வந்துள்ளார். அதன்பின் உத்தரகாண்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

விபத்து

விபத்து

இதையடுத்து இன்று அதிகாலை திரும்பி காலை பண்ட் டெல்லிக்கு வருவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. டெல்லியில் இன்று பிற்பகல் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும், நாளை புத்தாண்டு தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காகவும் பண்ட் டெல்லி திரும்பி இருக்கிறார். வீட்டில் சொல்லாமல் இவர் டெல்லி நோக்கி வந்துள்ளார். டெல்லியில் புத்தாண்டு அன்று தனது குடும்பத்திற்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று பண்ட் நினைத்துள்ளார். இதனால் அதிகாலையில் வேகமாக கார் ஓட்டி வந்துள்ளார்.

விபத்து

விபத்து

இந்த நிலையில்தான் அவர் டெல்லி திரும்பும் வழியில் ரூர்கி என்ற இடத்தில் கார் விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அதிகாலை 7 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பிஎம்டபிள்யு காரில் அவர்தான் காரை ஓட்டி வந்துள்ளார். எப்போதும் டிரைவருடன் செல்லும் அவர் இந்த முறை டிரைவருடன் செல்லவில்லை. வடமாநிலங்களில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. டெல்லியில் அதிகாலையில் 7 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைந்துள்ளது. இதனால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். முக்கியமாக அதிகாலை நேரங்களில் இந்த குளிரில் வாகனம் ஓட்டுவது மிக கடினமான காரியமாக மாறி உள்ளது.

பனி

பனி

முக்கியமாக பனி மூட்டம் மிகப்பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது. இந்த நிலையில்தான் பனி காரணமாக சாலை கண்ணுக்கு தெரியாமல் பண்ட் விபத்திற்கு உள்ளாகி இருக்கிறார். இவர் காட்டுத்தனமான வேகத்தில் காரை ஓட்டி வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதற்கான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. மிக வேகத்தில் வந்து சாலை நடுவே இருக்கும் டிவைடரில் இவர் மோதி உள்ளார். சாலையில் பனி மூட்டம் இருந்ததால் நடுவில் சாலை தடுப்பு தெரியவில்லை. நடுவில் சாலை சந்திப்பு வரும் இடத்திற்கு அடுத்து இருந்த சாலை தடுப்பை பார்க்காமல் அதில் நேராக கொண்டு போய் காரை மோதி இருக்கிறார் பண்ட்.

காயம்

காயம்

கார் மோதிய வேகத்தில் பண்டிற்கு தலையில் காயம் ஏற்பட்டு உள்ளது. கார் மோதியதோடு மட்டுமின்றி அப்படியே புரண்டு போய் பின் பக்கமும் சாலை தடுப்பில் மோதி இருக்கிறது. இதனால் தலையில் மட்டுமின்றி முதுகிலும் இவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மோதியவுடன் காரில் இருந்து பண்ட் படுகாயத்துடன் கீழே இறங்கி உள்ளார். கார் மோதிய வேகத்தில் உடனே எஞ்சின் தீ பிடிக்க தொடங்கி உள்ளது. இதனால் ஜன்னலை உடைத்து அவசர அவசரமாக வெளியேறி உள்ளார். ரூர்கி என்ற பகுதிக்கு அருகே கார் விபத்தில் சிக்கி இருக்கிறது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+