Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு வாரத்தில்.. 23 பேரால் சின்னாபின்னமான 19 வயசு பெண்.. இப்படியுமா? ஆடிப்போன உத்திரப் பிரதேசம்

Subscribe to Oneindia Tamil

கான்பூர்: உத்திரப் பிரதேசத்தில் நடந்த சம்பவத்தை கேள்விப்பட்டு, மொத்த மாநில மக்களும் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.. இது தொடர்பான விசாரணைகள் நடந்து கொண்டிருக்கின்றன.. 6 பேர் கைதாகி உள்ளனர்.. மிச்சம் உள்ளவர்கள் தலைமறைவாக இருப்பதால, அவர்களை தேடும் பணி நடக்கிறது. பெண்கள் மீதான வன்முறைகளை தடுத்துநிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்து வருகிறது.. என்ன நடந்தது உத்திரப் பிரதேச மாநிலத்தில்?

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகி வரும் நிலையில், பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகிவிட்டது.. இவைகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் அந்தந்த மாநில அரசுகள் தீவிரமாக எடுத்த வந்தபோதிலும், குற்றங்களை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை..

Uttar pradesh 19 year old girl varanasi

போக்சோ சட்டங்கள்

பெண்களை பாதுகாக்கவே போக்சோ போன்ற சட்டங்கள் உள்ளது என்றாலும்கூட, போக்சோவில் பலர் கைதானாலும்கூட, இதுபோன்ற பாலியல் கொடூரங்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. எனவேதான் போக்சோவின் தண்டனையை கடுமைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

கடநத மாதம் கோவையில் 17 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் திருப்பூரில் கணவர் மற்றும் குழந்தையின் கண் முன்னே இளம்பெண் ஒருவர் கத்தி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழக மக்ககை வெலவெலக்க செய்துவிட்டது.

16 வயது சிறுமி

இதுபோன்ற குற்றங்கள் பெரும்பாலும் வடமாநிலங்களில் அதிகரித்தபடியே உள்ளது.. நேற்று முன்தினம் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி தன்னுடைய அம்மாவுக்காக சாலையில் காத்து கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த இளைஞர்கள் 2 பேர் அவரை காரில் கடத்தி சென்றனர்.. தொடர்ந்து ஓர் ஓட்டலுக்கு அழைத்து சென்று கூட்டு பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளனர்..

அவர்களிடம் இருந்து தப்பிய அந்த சிறுமி இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் வாலிபர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து வீடியோவையும் கைப்பற்றினார்கள்.

வடக்கு வாரணாசி பெண்

இதோ இன்னொரு கொடுமை இதே உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.. வடக்கு வாரணாசியில் உள்ள லால்பூர் பகுதியை சேர்ந் அந்த பெண்ணுக்கு 19 வயதுதான் ஆகிறது.. கடந்த மாதம் 29ம் தேதி தனது தோழியை பார்க்க செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றிருக்கிறார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பயந்துபோன பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் மகள் கிடைக்காத நிலையில், கடந்த 4ம் தேதி போலீசில் புகார் செய்திருக்கிறார்கள்.

இந்த புகாரின்பேரில் போலீசாரும் தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள். இறுதியில், அந்த இளம்பெண் பாண்டேபூர் பகுதியில் போதையில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். பிறகு அவர் வீட்டுக்கு சென்ற நிலையில் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து பெற்றோரிடம் சொல்லி அழுதிருக்கிறார். அதாவது, சம்பவத்தன்று தன்னுடைய தோழியை பார்க்க சென்றாராம்..

பைக்கில் சிக்கிய பெண்

அப்போது தனக்கு அறிமுகமான நண்பர் ஒருவரை அங்கே சந்தித்துள்ளார். அவர் நபரோ, இளம்பெண்ணை தன்னுடைய பைக்கில் கூட்டிச் சென்று, ஒரு அறையில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.. பிறகு அங்கிருந்து மீண்டும் பைக்கில் அழைத்து வந்து, நடேசர் பகுதியில் விட்டு சென்றுவிட்டார்..
இளம்பெண் பைக்கிலிருந்து இறங்கியதுமே 5 பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை ஒரு ஹோட்டலுக்கு கடத்திச் சென்றுள்ளது.. ரூமில் அடைத்து வலுக்கட்டாயமாக போதைப்பொருளை தந்து, அன்று முழுவதும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.. மறுநாள் 3 பேர் அதே ஹோட்டலுக்கு வந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.,.

காட்டுப்பகுதியில் இளம்பெண்

பிறகு வேறு சில நபர்கள், அந்த பெண்ணுக்கு போதைப்பொருள் கலந்த நூடுல்ஸ் வாங்கி தந்துள்ளனர்.. அதை சாப்பிட்டதுமே இளம்பெண் மயங்கி விழுந்துள்ளார். பிறகு அவர்களும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இப்படியே தொடர்ந்து 7 நாட்கள் அந்த பெண் பலாத்காரத்துக்கு ஆளாகியிருக்கிறார்.. 8வது நாள், அந்த பெண்ணை அருகிலுள்ள காட்டுப்பகுதியில் விட்டு விட்டு சென்றுவிட்டார்களாம்..

அன்று முழுவதுமே காட்டுப்பகுதியில் போதையில் விழுந்து கிடந்திருக்கிறார்.. மறுநாள் போதை தெளிந்து அந்த பெண் தன்னுடைய தோழி வீட்டுக்கு சென்றுள்ளார்.. 7 நாட்களில் 23 பேர் தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லி அழுதுள்ளார். இதையெல்லாம் மகள் சொல்வதை கேட்டு பெற்றோர் வெலவெலத்து போய்விட்டார்கள்..

அதிர்ச்சியில் உத்தர பிரதேசம்

பிறகு, இதுகுறித்து மீண்டும் போலீசாரிடம் புகார் தந்தனர்.. இந்த புகாரின் பேரில் நடவடிக்கையில் இறங்கிய போலீசார், கூட்டு பாலியல் வன்கொடுயைில் ஈடுபட்டவர்களில் 6 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.. பெண்ணை பலாத்காரம் செய்தவர்களில் சிலர் 18 வயதுக்கும் குறைவானவர்களாக இருக்கிறார்களாம்.. அவர்களையும் கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். 7 நாளில் 23 பேரால் இளம்பெண் சீரழிக்கப்பட்ட சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தையே உலுக்கி எடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+