ஒரே நாளில் சூப்பர் ஹீரோ.. தினேஷ் கார்த்திக்கை இயக்குனர் சங்கர் எப்படி வாழ்த்தினார் தெரியுமா?
நேற்று நடந்த முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியின் மூலம் தினேஷ் கார்த்திக் ஒரே நாளில் ஹீரோவாகி இருக்கிறார்.
Recommended Video

சென்னை: நேற்று நடந்த முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியின் மூலம் தினேஷ் கார்த்திக் ஒரே நாளில் ஹீரோவாகி இருக்கிறார். இணையம் முழுக்க தினேஷ் கார்த்திக் வைரல் ஆகியுள்ளார்.
நேற்றைய கடைசி இரண்டு ஓவரில் மொத்தம் தினேஷ் கார்த்திக் 8 பந்துகள் பிடித்தார். இதில் 3 சிக்ஸ் இரண்டு பவுண்டரி அடித்தார், மொத்தம் 362.50 ஸ்டிரைக் ரேட்டுடன் 29 ரன்கள் எடுத்தார். அவர் வாழ்நாளில் மிக சிறப்பான ஆட்டத்தை ஆடி இந்தியாவிற்கு வெற்றியை தேடி கொடுத்தார்.
இந்தியா முழுக்க இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இயக்குனர் சங்கர் தினேஷ் ஆட்டத்தை பார்த்துவிட்டு வாழ்த்தி இருக்கிறார்.
|
ஹர்பஜன் சிங்
இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸின் புதிய வீரர் ஹர்பஜன் சிங் டிவிட் செய்துள்ளார். அதில் ''தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆட்டத்தை முடித்தீர்கள். சூப்பர் ஆட்டம்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார். ரோஹித் சர்மாவையும் வாழ்த்தியுள்ளார்.
|
சச்சின் டெண்டுல்கர்
கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் ''இந்திய அணிக்கு சிறப்பான வெற்றி. தினேஷ் கார்த்திக் மிகவும் சிறப்பாக ஆடினார். ரோஹித் சிறப்பாக ஆடி நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தார். என்ன ஒரு பைனல் ஆட்டம்'' என்றுள்ளார்.
|
கோஹ்லி
அதேபோல் விராட் கோஹ்லி அவரது டிவிட்டரில் ''நேற்றைய இரவு என்ன ஒரு ஆட்டம் நடந்து இருக்கிறது. முறையான குழு செயல்பாடு. தினேஷ் கார்த்திக் சூப்பர்'' என்றுள்ளார்.
|
அஸ்வின் டிவிட்
சக தமிழக வீரர் அஸ்வின் ''நேற்றைய இரவு தினேஷ் கார்த்திக் என்ன ஒரு ஆட்டம் ஆடினார். எனக்கு அவரை தெரியும், அவருக்கு இப்படி ஆட வேண்டும் என்பதுதான் பல நாள் விருப்பம். கடைசியாக அது நேற்று இரவு நடந்துவிட்டது.'' என்றுள்ளார்.
|
தாதா கங்குலி
அதேபோல் கிரிக்கெட் தாதா கங்குலி தனது டிவிட்டில் ''வாவ் தினேஷ் கார்த்திக் என்ன ஒரு பேட்டிங். சூப்பர்'' என்று பிசிசிஐ அமைப்பையும் பாராட்டி டிவிட் செய்துள்ளார்.
|
நடிகை கஸ்தூரி
நடிகர் கஸ்தூரி தினேஷ் கார்த்திக் குறித்து டிவிட் செய்துள்ளார். அதில் ''தினேஷ் கார்த்திக், ஐ லவ் யூ. சென்னை உங்களை விரும்புகிறது. தமிழ்நாடு உங்களை விரும்புகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உங்களை விரும்புகிறது. இந்தியா உங்களை விரும்புகிறது. ஏன் இலங்கையும் உங்களை விரும்புகிறது. பாவம் வங்கதேச பாம்பாட்டக்காரார்கள்'' என்றுள்ளார்.
|
சங்கர்
2.0 படமெடுக்கும் இடைவெளியில் இயக்குனர் சங்கர் தினேஷ் கார்த்திக்கின் ஆட்டத்தை பார்த்து இருக்கிறார். அவரது டிவிட்டரில் ''என்ன ஒரு சிறந்த மறக்க முடியாத கடைசி நேர பேட்டிங். ஹீரோ தினேஷ் கார்த்திக்குக்கு வாழ்த்துக்கள்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications