இரவோடு இரவாக கிடைத்த வினாத்தாள்.. ஆளுக்கு ரூ.40 லட்சம் வசூல்.. நீட் தேர்வில் அரங்கேறிய மெகா மோசடி!
பாட்னா: நீட் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்த விவகாரம் பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், இதில் கைதான மாணவர்களில் ஒருவர் கொடுத்த வாக்குமூலம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதாவது தேர்வுக்கு முந்தைய நாளே வினாத்தாள்கள் அவர்களுக்குக் கிடைத்துள்ளது. அதை வைத்துத் தான் அவர்கள் தேர்வுக்குத் தயாரானதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இந்தாண்டு நீட் தேர்வு முடிவுகள் வெளியானது முதலே பெரும் குழப்பம் தான். நீட் முடிவுகள் அறிவிக்கப்பட்ட தேதியைக் காட்டிலும் திடீரென முன்கூட்டியே வெளியானதே முதலில் சர்ச்சையைக் கிளப்பியது.

அடுத்து சுமார் 1500 மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதும் விவாதத்தைக் கிளப்பியது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பிய நிலையில், கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டன.
நீட் தேர்வு: இது ஒரு பக்கம் என்றால் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததும் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இந்த நீட் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்த விவகாரத்தில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் கைதான மாணவர் கொடுத்த வாக்குமூலமே இப்போது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதாவது தேர்வுக்கு முந்தைய நாளே தனக்கு நீட் தேர்வு வினாத்தாள் கிடைத்ததாகவும் அதை வைத்தே தேர்வுக்குத் தயாரானதாகவும் அந்த மாணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் பீகாரை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனுராக் யாதவ், சிக்கந்தர் யாதவேந்து, நிதிஷ் குமார் மற்றும் அமித் ஆனந்த் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்கள் போலீசாருக்கு அளித்த வாக்குமூலம் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. அதாவது தேர்வுக்கு முந்தைய நாள் வினாத்தாள் கிடைத்ததாகவும், அதை மனப்பாடம் செய்து தேர்வு எழுதியதாகவும் அந்த மாணவர்கள் வாக்குமூலம் அளித்தனர்..
வாக்குமூலம்: இது குறித்து கைதான அனுராக் யாதவ் கூறுகையில், "தேர்வுக்கு முந்தைய நாளே வினாத்தாள்கள் எங்களிடம் வந்துவிட்டது. அதைத் தான் மனப்பாடம் செய்தோம். தேர்வு நாளில் சரியாக அதே கேள்விகள் தான் வந்தது. ஆனால், போலீசார் கைது செய்ததும் நான் தவறை மறைக்க முயலவில்லை.. போலீசாரிடம் தவறை ஒப்புக் கொண்டோம்" என்று அவர் தெரிவித்தார்.
கைதான நிதிஷ் குமார் மற்றும் அமித் ஆனந்த் ஆகியோர் நினைத்தால் எந்தவொரு போட்டித் தேர்வின் வினாத்தாளை ரெடி செய்து கொடுத்துவிடுவார்களாம்.. அதற்காக ₹ 30-32 லட்சம் வரை பணமாக வாங்குவார்களாம். இந்த முறையும் நீட் தேர்வுக்கு ஒவ்வொரு மாணவரிடம் இருந்தும் ரூ.40 லட்சத்தை வசூலித்துள்ளனர்.
நீட் தேர்வு முடிவுகள்: இந்தாண்டு இளங்கலை நீட் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நடந்தது. இதில் சுமார் 24 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். நீட் தேர்வு முடிவுகள் வெளியான உடனேயே வினாத்தாள் கசிவு மற்றும் கருணை மதிப்பெண்கள் விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியது. எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த விவகாரத்தை மிகப் பெரிய விஷயமாகக் கையில் எடுத்துள்ள நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்துள்ளது.
முன்னதாக இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நீட் விவகாரத்தில் யாராவது 0.001% அலட்சியம் இருந்தாலும் கூட அதற்குப் பதில் சொல்லியே தீர வேண்டும் என்று சுப்ராம் கோர்ட் காட்டமான கருத்துகளைக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications