கவாச் சிஸ்டம் என்றால் என்ன? கோரமண்டல் ரயிலில் விபத்தை எப்படி தடுத்திருக்கும்? எளிய விளக்கம்
புவனேஸ்வர்: கவாச் சிஸ்டம் என்ன ஆனது. கோரமண்டல் ரயிலில் இருந்ததா, டெல்லி தூரந்திரோ ரயிலில் இருந்ததா என்ற கேள்விகள் எழுகிறது.ஒருவேளை கவாச் சிஸ்டம் சரியாக செயல்பட்டிருந்தால் அல்லது அந்த ரயில்களில் இருந்திருந்தால் ரயில் விபத்து நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்று பயணிகள் கேள்வி எழுப்புகிறார்கள்
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே சென்னை கோரமண்டல் ரயில் உள்பட 3 ரயில்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கி 233 பேர் பலியாகி உள்ளனர். 900 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். விபத்தில் சிக்கியோரை மீட்கும் பணியில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த கோரவிபத்து காரணமாக கிழக்கு கடற்கரை ரயில்வே வழித்தடத்தில் வரும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது

இந்த விபத்து நடந்ததற்கு ஒரே டிராக்கில் இரண்டு ரயில்கள் வந்தது காரணம் என்று புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்திய ரயில்களில் கவாச் என்று சிஸ்டம் கடந்த ஆண்டு சோதனை செய்யப்பட்டது. இந்த சிஸ்டம் ஒரே டிராக்கில் இரு ரயில்கள் வந்தால் ரயில்கள் விபத்தில் சிக்காமல் காப்பாற்றும். இந்த சிஸ்டம் கோரமண்டல் ரயிலில் இருந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கவாச் (Kavach) என்பது இந்திய ரயில்வேயின் தானியங்கி ரயில் பாதுகாப்பு கருவியாகும். இது முழுமையாக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் ஆகும். இந்த தொழில்நுட்பத்தை ரயில்வேயின் வடிவமைப்பு ஆராய்ச்சி அமைப்பான ஆர்டிஎஸ்ஓ உருவாக்கியுள்ளது.ரயில்கள் மோதிக் கொள்வதைத் தடுக்கும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'கவாச்' கருவியாகும். இது கடந்த ஆண்டு செகந்திராபாத் (ஹைதராபாத்) ரயில் நிலையத்தில் சோதனையும் செய்யப்பட்டது. இதற்காக இயக்கப்பட்ட இரு ரயில்களில் ஒன்றில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும், மற்றொரு ரயிலில் ரயில்வே வாரியத் தலைவர் வி.கே. திரிபாதியும் பயணம் செய்தும் காட்டினார்கள்.

தெற்கு மத்திய ரயில்வேயில் குல்லாகுடா-சிட்கிட்டா ரயில் நிலையங்களுக்கிடையே இந்த பரிசோதனையும் அப்போது மேற்கொள்ளப்பட்டது. அப்போது இரண்டு ரயில் என்ஜின்கள் எதிரெதிரான திசையில் வருகின்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டது. இந்த என்ஜின்களில் பொருத்தப்பட்ட கவாச் விபத்து தடுப்புக் கருவி தாமாகவே செயல்பட்டு 380 மீட்டருக்கு முன்பே இரண்டு என்ஜின்களையும் நிறுத்தி விடப்பட்டது
இதே போல் சிவப்பு சமிக்ஞை விளக்கு வரும்போது ஓட்டுநர் பிரேக்கை பயன்படுத்தாமலேயே கவாச் கருவி என்ஜின் செயல்பாட்டை நிறுத்தி அசத்தியது. இணைப்புப் பாதைகள் வரும்போது ரயிலின் வேகத்தை மணிக்கு 60 கி.மீ. என்பதிலிருந்து மணிக்கு 30 கி.மீட்டராக கவாச் கருவி தானாகவே குறைத்தும் காட்டியது. இந்த திட்டத்தை பலரும் பாராட்டினார்கள். 2022-23-இல் 2,000 கி.மீ. ரயில் பாதை கவாச் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்படும் என்று அப்போது ரயில்வே அமைச்சகம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் கவாச் சிஸ்டம் என்ன ஆனது. கோரமண்டல் ரயலில் இருந்ததா, டெல்லி தூரந்திரோ ரயிலில் இருந்ததா என்ற கேள்விகள் எழுகிறது.ஒருவேளை கவாச் சிஸ்டம் சரியாக செயல்பட்டிருந்தால் அல்லது அந்த ரயில்களில் இருந்திருந்தால் ரயில் விபத்து நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்றே சொல்கிறார்கள்.
இந்நிலையில் விபத்துக்குள்ளான ரயில் வழித்தடத்தில் ரயில் விபத்துகளை தவிர்க்க கவாச் என்று அழைக்கப்படும் தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு அமைக்கப்படவில்லை என்பதை ரயில்வே உறுதி செய்துள்ளது. இந்திய ரயில்வே செய்தித் தொடர்பாளர் அமிதாப் சர்மா , ஒடிசா ரயில் விபத்து குறித்து கூறும் போது, மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. நாங்கள் சீரமைப்புப் பணிகளைத் தொடங்குகிறோம். இந்த வழித்தடத்தில் கவாச் சிஸ்டம் இல்லை என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications