ராஜஸ்தான் தேர்தல விடுங்க.. அங்க கலக்குதே இந்த "மோடி" வெடி.. டைப் டைப்பாக வெடிக்கும்! தீபாவளி ஸ்பெஷல்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் களம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், அங்கே தீபாவளி பட்டாசு சந்தையில் வந்துள்ள மோடி வெடி அனைவரது கவனத்தையும் ஈர்ப்பதாக இருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலத்தை பொறுத்தவரை இப்போது அசோக் கெலாட் தலைமையிலான அரசு நடந்து வருகிறது. அங்கே காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
அங்கு மொத்தம் 200 தொகுதிகள் இருக்கும் நிலையில், எந்தவொரு கட்சியும் குறைந்தது 101 தொகுதிகளை வென்றால் தான் ஆட்சியை பிடிக்க முடியும். இதனால் அந்த மேஜிக் எண்ணிக்கைக்காகவே இரு கட்சிகளும் போராடி வருகிறது.

மோடி வெடி: ராஜஸ்தான் மாநிலத்தில் இப்போது காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. அங்கே மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் வார்த்தை மோதலிலும் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே தீபாவளி பண்டிகை இப்போது நெருங்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் புதிய பட்டாசுகள் வெளியாகியுள்ளது. இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ராஜஸ்தானில் இந்த தீபாவளியை முன்னிட்டு நமோ பாம் வெடிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களிடையே மிக பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாம். புது ஸ்டாக் வர வர விற்று தீர்ந்து வருகிறதாம். விற்பனை உச்சத்தில் இருக்க இதன் தேவையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. நமோ மற்றும் மோடி பாம் என்ற பெயரில் இந்த வெடிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாம்கள் ஒரு பாக்கெட் ரூ.150 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது.
என்ன ஸ்பெஷல்: இதில் இருக்கும் ஒவ்வொரு பாக்கெட்டும் தனித்துவமான ஒலிகளை எழுப்புமாம். அதாவது இந்த பாக்கெட்களில் இருக்கும் ஒவ்வொரு வெடியும் ஒவ்வொரு சத்ததை உண்டாகும். அதாவது எந்தவொரு இரண்டு வெடிகளும் ஒரே சத்ததை உண்டாக்காது. இதுவே மோடி வெடிகளின் சிறப்பாகும். மேலும், இந்த மோடி-தீம் பட்டாசுகளில் மற்ற பட்டாசுகளுடன் ஒப்பிடும்போது அவற்றில் குறைந்த அளவுக்கே ரசாயனங்கள் இருக்குமாம். இதனால் காற்று மாசும் குறைகிறது.
அதேநேரம் சில தனித்துவமான முறையில் இந்த வெடியை உருவாக்குவதால் அது சக்திவாய்ந்த மற்றும் தனித்துவமான ஒலியை உண்டாக்கும். இந்த வெடிகளில் மோடியின் படம் இடம் பெற்றுள்ளதும் அதன் விற்பனையை அதிகரிக்க காரணம் என்று சொல்லப்படுகிறது.
டல்லடிக்கும் தீபாவளி: மேலும், இந்த ஆண்டு பட்டாசுகளின் விலையும் கூட கணிசமாக உயர்ந்துள்ளது. அனைத்து வகையான பட்டாசுகளின் விலையும் சுமார் 20% வரை உயர்ந்துள்ளன. அதிலும் குறிப்பாக வானில் கலர் கலராக ஒளிரும் ராக்கெட் வகை வெடிகளின் விலை இன்னுமே கணிசமாக உயர்ந்துள்ளன. மேலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பட்டாசுகளும் ஆங்காங்கே விற்பனைக்கு வந்துள்ளது நல்ல விஷயமாக இருக்கிறது.
தேர்தல் நெருங்குவதால் ராஜஸ்தான் அரசியல் களம் இப்போது உச்சத்தில் இருக்கிறது. இந்த நேரத்தில் சந்தையை ஆக்கிரமித்துள்ள மோடி வெடியும் டிரெண்டிங்கில் இணைந்துள்ளது. பொதுமக்கள் பலரும் இதை ஆர்வமாக வாங்கி செல்லும் நிலையில், இதற்கு டிமேண்டும் அதிகமாக உள்ளதாக அம்மாநில வியாபாரிகள் கூறுகிறார்கள். அங்குள்ள அரசியல் தளத்தை பொறுத்தவரை, ராஜஸ்தானில் வரும் நவ. 25ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications