நித்தியானந்தா... ஆண்மை சோதனையில் 2வது சாமியார்... சோதனையில் என்ன செய்வார்கள்?
டெல்லி: நித்தியானந்தா ஆண்மை சோதனைக்கு கண்டிப்பாக உட்பட்டே ஆக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உறுதிபடக் கூறி விட்டது. எனவே இனியும் நித்தியானந்தா இந்த சோதனையிலிருந்து தப்ப முடியாத இக்கட்டான நிலைக்கு வந்து விட்டார்.
சில மாதங்களுக்கு முன்பு இதே போல பாலியல் வழக்கில் சிக்கிய ஆசாராம் பாபு என்ற சாமியாருக்கு ஆண்மை சோதனை நடத்தினர். அந்த சோதனையின் முடிவு டாக்டர்களையே அதிர வைத்தது. காரணம், 75 வயதான ஆசாராம் பாபு நல்ல ஆண்மையுடன் இருப்பதாக தெரிய வந்ததே.
இந்த நிலையில் தற்போது நித்தியானந்தாவுக்கும் அந்த சோதனை கிட்டத்தட்ட கிட்டே வந்து விட்டது. இந்த ஆண்மை சோதனையின்போது 3 கட்டமாக சம்பந்தப்பட்ட நபரைப் பரிசோதிப்பார்களாம். அதுகுறித்த ஒரு பார்வை....!

ஆசாராமுக்கு அடுத்த சாமியார்
சில மாதங்களுக்கு முன்பு பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்ய்பட்ட சாமியார் ஆசாராம் பாபுவுக்கும் இந்த ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது நித்தியானந்தாவுக்கும் இதே சோதனை நடத்தப்படவள்ளது.

சோதனையின் நோக்கம்
குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு செக்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடிய அளவுக்கு உடலில் தெம்பு உள்ளதா, அவரால் ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக புணர்ச்சி கொள்ளக் கூடிய தகுதி உள்ளதா, அந்த நபரால் ஒரு பெண்ணை கர்ப்பமாக்கும் அளவுக்கு தகுதி உள்ளதா, அவரது விந்தனுவின் வேகம் என்ன என்பதை அறிவதே இந்த ஆண்மைப் பரிசோதனையின் நோக்கம். இதை வைத்து பாலியல் பலாத்கார வழக்கின் நிலைமை உறுதிப்படும்.

என்ன செய்வார்கள்...
இது சாதாரண மருத்துவப் பரிசோதனைதான். 3 விதமான முறையில் சோதனைகள் நடைபெறும். இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபரின் ஆண்மைத் திறன் குறித்த முடிவுக்கு வருவார்கள் மருத்துவர்கள். இந்த சோதனைகளைப் பொதுவாக யூரோ ஆண்ட்ராலஜிஸ்ட் மருத்துவர்தான் நடத்துவார்.

முதலில் விந்தனு ஆய்வு
இந்த சோதனையில் விந்தனுவின் எண்ணிக்கை உள்ளிட்டவை கணக்கிடப்படும். அதன் செயல் திறன் பரிசோதிக்கப்படும்.

2வது ஆணுறுப்பு சோதனை
அடுத்து ஆணுறுப்பு குறித்த சோதனை. இதில் ஆணுறுப்புக்கு ரத்த ஓட்டம் சரியாக இருக்கிறதா என்பதை டாப்ளர் ஸ்கேன் மூலம் சோதித்துப் பார்ப்பார்கள். மேலும் ஆணுறுப்பு எழுச்சி இருக்கிறதா என்பதும் சோதிக்கப்படும். ஆணுறுப்பு எழுச்சி சரியாக இருந்தால் ரத்த ஓட்டம் ஆணுறுப்புக்குள் இருக்கும். எழுச்சி இல்லாவிட்டால் ரத்த ஓட்டமானது ஆணுறுப்பின் வெளிநரம்புகளில் அதிகமாக இருக்கும்.

3வது சோதனை
3வது சோதனையானது ஆணுறுப்பின் எழுச்சியை வெளிப்புறத்திலிருந்து கவனிப்பது. சாதாரண நிலையில் ஆணுறுப்பு எப்படி உள்ளது. விரைத்த நிலையில் எப்படி உள்ளது என்பதைக் கண்ணால் கண்டு அனுமனிப்பார்கள்.

முன்பு நடந்ததே வேறு...
முன்பெல்லாம் இதுபோன்ற சோதனைக்கு வரும் குற்றவாளிகளிடம் சுய இன்பம் (masturbate) செய்யச் சொல்லி அவர்களின் செயல் திறனை டாக்டர்கள் கவனித்தார்கள் என்று கூறப்படுதுண்டு. ஆனால் இப்போதெல்லாம் அப்படி நடப்பதில்லை. முழுக்க முழுக்க மருத்துவ ரீதியில்தான் சோதனைகள் நடத்தப்படுகின்றன.

இப்படியும் ஒரு சோதனை
இதேபோல தற்போது என்பிடி எனப்படும் நாக்டர்னல் பீனைல் டியூமசீன் (Nocturnal Penile Tumescence) என்ற சோதனையும் நடத்தப்படுகிறது. இதை தூங்கும் நிலையில், ஆணுறுப்பின் எழுச்சியை வைத்து சோதிப்பார்கள்.

இரவு முழுவதும்
இந்த சோதனையின்போது சம்பந்தப்பட்ட நபரின் உடலில் ஒரு கருவி பொருத்தப்படும். இது இரவு நேரத்தில் சம்பந்தப்பட்ட நபரின் ஆணுறுப்பின் அசைவு மற்றும் நீட்சியைக் கணக்கிட்டு தெரிவிக்கும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications