டெல்லி விவசாயிகள் போராட்டம்: செங்கோட்டையில் சீக்கிய கொடி: தீப் சித்து பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil
செங்கோட்டையில் கொடி: பஞ்சாபி நடிகர் தீப் சித்து பின்னணி என்ன?
DEEP SIDHU FACEBOOK
செங்கோட்டையில் கொடி: பஞ்சாபி நடிகர் தீப் சித்து பின்னணி என்ன?

2021 ஜனவரி 26-ம் தேதி, கிசான் டிராக்டர் அணிவகுப்பின் நிர்ணயிக்கப்பட்ட வழித்தடத்திலிருந்து ஒரு பகுதி மக்கள் பிரிந்து செங்கோட்டையை அடைந்தனர். அங்கு அவரகள் சீக்கிய மத சின்னங்களையும், காவி சின்னங்களையும், விவசாயிகளின் சங்க கொடிகளையும், வேறு சில கொடிகளையும், செங்கோட்டையின் சுவர்களில் ஏற்றி வைத்தனர்.

இந்த சம்பவத்தில் தீப் சித்து என்ற நடிகர் ஈடுபட்டதாக பேசப்பட்டு வருகிறது. தற்போது செங்கோட்டையில் நடந்த வன்முறை தொடர்பாக பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் அவரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த போது, தீப் சித்து அங்கு இருந்தார் மற்றும் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். பின்னர்தான் தீப் சித்து விமர்சிக்கப்பட்டார். வாருங்கள் என்ன நடந்தது என்று புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

செப்டம்பர் 2020-ல் நடந்த கிசான் போராட்டத்தில் தீப் சித்து கலந்து கொண்டார். இதன்பின்தான் அவர் சமூக ஊடகத்தில் அதிக கவனத்தை ஈர்த்தார் .

தீப் சித்து ,போலீஸ் அதிகாரிகளுடன் ஆங்கில மொழியில் வாதிடுகின்ற வீடியோ ஒன்று வைரலானது, அதில் அவர் "இது ஒரு போராட்டம் , இது ஒரு புரட்சி" என்று கூறுவதைக் கேட்க முடியும். இந்தப் பிரச்னையின் தீவிரத்தை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால், அது இந்த நாட்டின் மற்றும் தெற்காசியாவின் புவிசார் அரசியலை வரையறுக்கும். " என்றும் கூறுகிறார் .

விவசாயிகளின் அமைப்புகள் , சித்துவை தங்களிடமிருந்து விலக்கி வைத்தபோது , சமூக ஊடகங்களில் அது பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. சமூக ஆர்வலர் மற்றும் வழக்கறிஞர் சிரம்ஜித் கௌர் கில், விவசாயிகள் அமைப்புகளின் நிலைப்பாட்டுடன் சமரசம் செய்து வைத்தார் , பின் அவர் அவ்வாறு முடிவெடுக்க காரணமாக இருந்த பிரச்னைகளையும் எடுத்துச் சொன்னார் .

விவசாயிகளின் போராட்டத்தில் சித்து மற்றும் தலைவர்களின் நிலைப்பாடு

விவசாயிகள் போராட்டம் தொடங்கியபோது, தீப் சித்து உள்ளிட்ட அனைவரும், விவசாய சங்கம் மற்றும் விவசாய தலைவர்களின் தலைமையில் இந்த போராட்டத்தை நடத்தி வருகிறோம் என கூறினர். சிறிது நேரத்திற்குப் பிறகு, தீப் சித்து விவசாய தலைவர்களின் முடிவுகளை கேள்வி கேட்கத் தொடங்கினார், ஷம்பு எல்லையில் தனது சொந்த மேடையை உருவாக்கினார்.

எனினும், அவரது உரைகளில் பெரும்பாலானவை, மூன்று விவசாய சட்டங்களைக் காட்டிலும் , இந்திய அரசியல் சட்டத்தின், கூட்டாட்சி அல்லாத அமைப்பு முறை பற்றியே கவனம் செலுத்தப்பட்டது.

எனவே வேளாண் சட்டங்கள் குறித்து பேசவில்லை என்பதால் அவரை விவசாயிகள் முக்கிய போராட்டக் களத்திலிருந்து ஒதுக்கி வைத்தனர்.

விவசாய சங்கங்களில் ஒன்றான, உக்ரஹான் குழு, அவர், விவசாயிகள் போராட்டத்தின் திசையை மாற்றுவதாக திட்டவட்டமாக தெரிவித்தது.

செங்கோட்டையில் கொடி: பஞ்சாபி நடிகர் தீப் சித்து பின்னணி என்ன?
DEEP SIDHU FACEBOOK
செங்கோட்டையில் கொடி: பஞ்சாபி நடிகர் தீப் சித்து பின்னணி என்ன?

ஜார்னைல் சிங் பிந்தராவாலே பற்றி தீப் சித்து தனது சமூக ஊடகத்தில் தொடர்ந்து பதிவிட்டதை அடுத்து விவசாயிகளின் அமைப்புகள் அவரை தம்மிடமிருந்து விலக்கி வைத்தன.

விவசாயிகள் அமைப்புகள் டெல்லியின் எல்லைகளை நோக்கி நகரும்படி அழைப்பு விடுத்தபோது, தீப் சித்து மக்களை திரும்ப செல்லுமாறு கேட்டுக்கொண்டார், ஏனென்றால் விவசாய அமைப்புகள் தங்கள் சொந்த நலனுக்காக அவரை பயன்படுத்துவதாக கூறினார் .

ஜனவரி 26-ம் தேதி டிராக்டர் பேரணி அறிவிக்கப்பட்ட பிறகு, தீப் சித்து மீண்டும் செயலில் இறங்கி, இந்த பேரணிக்காக மக்களை திரட்டத் தொடங்கினார். எனினும், அவர் அவுட்டர் ரிங் ரோட் சாலையில் திரள கூட்டம் சேர்த்தார்.

இதற்கிடையில், கிசான் மஸ்தூர் போராட்டக் குழு, மற்றொரு இடதுசாரி பாரதிய கிசான் தொழிற்சங்கம் (புரட்சி்) திட்டத்தின் படி, தில்லியின் அவுட்டர் ரிங் ரோட் சாலையில் பேரணி நடத்த அழைப்பு விடுத்தது. இந்த அறிக்கைகளினால் , ஒருங்கிணைந்த கிசான் மோர்ச்சாவிற்கு , போலீஸ் அனுமதி அளித்திருந்த , பாதையிலிருந்து வேறு பாதைக்குச் செல்ல , தீப் சித்துவுக்கு ஒரு வாய்ப்பை அளித்தது.

திங்களன்று, தீப் சித்து மற்றும் லகா சிதானா ஆகியோர், சிங்கு எல்லையின் முக்கிய அரங்கில், அவர்கள் தில்லி நகருக்குள் சென்று, போலீஸ் மற்றும் அமைப்புகளால் தீர்மானிக்கப்படும் பாதையை விடுத்து வேறொரு அணிவகுப்பு நடத்துவார்கள் என்று கூறினர்.

பின்னர் செவ்வாய்க்கிழமை, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் குழு ஒன்று செங்கோட்டைக்கு சென்றது . தீப் சித்துவும் அங்கு நின்று கொண்டிருந்தார். செங்கோட்டையில் இளைஞர்கள் காவி மற்றும் விவசாயிகளின் கொடிகளை ஏற்றி கொண்டிருந்த போது தீப் சித்து உடனிருந்தார்.

அப்போது அவர் தன்னை ஒரு வீடியோவும் எடுத்துக் கொண்டிருந்தார் .

தீப் சித்துவின் விளக்கம்

செங்கோட்டை சம்பவம் நடந்த பிறகு, இரவு பேஸ்புக் லைவ் மூலம் தீப் சித்து தனது விளக்கத்தை அளித்தார்.

"நாங்கள் எந்த கொடியையும் தரையிறக்கவில்லை, ஆனால் எங்கள் நிஷான் சாஹிப் மற்றும் கிசான் மஸ்தூர் ஒற்றுமை கொடியைதான் நாங்கள் ஏற்றினோம் . அது அனைவரின் உதவியுடன் செய்யப்பட்டது, நான் தனியாக செய்யவில்லை . நான் யாரையும் ஊக்குவிக்கவில்லை . இவை அனைத்தும் ஒரு போக்கில் நடந்தன, யாரையும் தூண்டவில்லை," என்றார்

தீப் சித்து மற்றும் தியோல் குடும்பம்

தீப் சித்து மற்றும் சன்னி தியோல் குடும்பத்துடனான உறவு குறித்து மாறுபட்ட கூற்றுகள் உள்ளன.

உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியுடன் தீப் சித்துவின் புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு, தீப் சித்து, பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் நோக்கத்தை முன்னெடுத்து செல்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது .

ஆனால் அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை மீண்டும் மீண்டும் மறுத்துள்ளார்.

தீப் சித்து தனது பழைய பேஸ்புக் லைவ் வீடியோவில், நடிகர் சன்னி தியோலின் தேர்தல் பிரசாரத்தின் போதுதான் , தான் பா.ஜ.க.வுடன் தொடர்பு கொண்டதாக கூறினார். பா.ஜ.க.வின் "பெரியதலைவர்களை" அவர் சந்தித்தார். தன்னை பாஜகவில் சேர்க்க முயற்சி மேற்கொண்டதாகவும், ஆனால் சித்தாந்த வேறுபாடுகள் காரணமாக அவர் அவ்வாறு செய்ய மறுத்துவிட்டார் என்றும் அவர் கூறினார்.

தீப் சித்துவின் பேஸ்புக் பக்கத்தில், அவர் மூத்த நடிகரும் சன்னி தியோலின் தந்தையுமான தர்மேந்திரா மற்றும் சன்னியின் சகோதரர் பாபி தியோல் தியோல் ஆகியோருடனான படங்கள் உள்ளன.

எனினும், செங்கோட்டை சம்பவத்திற்குப் பிறகு, அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் , தீப் சித்துவுடன் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்து , சன்னி தியோல் ட்வீட் செய்தார்.

"செங்கோட்டையில்இன்று என்ன நடந்தது என்பதைப் பார்த்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன். எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் , சித்துவுடன் எந்த தொடர்பும் இல்லை என்பதை டிசம்பர் 6 ஆம் தேதி ட்விட்டரில் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டேன். " என தியோல் தெரிவித்திருந்தார்.

டிசம்பர் 6 ம் தேதி தனது ட்வீட்டில், விவசாயிகளின் போராட்டம் அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே உள்ள பரஸ்பர பிரச்னை என்று வர்ணித்ததோடு, டீப் சித்து பற்றியும் தெளிவுபடுத்தினார் சன்னி தியோல். இந்த ட்வீட்டில், அவர் எழுதிய அறிக்கயுடன் ஒரு படத்தையும் பகிர்ந்தார் .

தேர்தல் நேரத்தில் தீப் சித்து என்னுடன் இருந்தார், ஆனால் நீண்ட நாட்களுக்கு என்னுடன் இருக்கவில்லை. அவர் என்ன செய்கிறாரோ அது அவரின் சொந்த விருப்பப்படிதான் செய்கிறார். அவரின் எந்த நடவடிக்கைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. "

தீப் சித்துவின் குடும்ப பின்னணி

பஞ்சாப் மாநிலம் முக்தசர் சாஹிப் மாவட்டத்தில் உள்ள உதேகரன் என்ற கிராமம் தான் தீப் சித்து வின் பூர்வீக கிராமமாகும்.

படின்டாவில் வசித்து வந்த தீப் -ன் சித்தப்பா, பிதி சிங் , பிபிசியிடம் கூறுகையில், தாங்கள் ஆறு சகோதரர்கள் என்றும், தீப்பின் தந்தை சர்தார் சுர்ஜித் சிங் வழக்கறிஞராக இருந்தார் என்றும் தெரிவித்தார். சுர்ஜித் சிங்கிற்கு மூன்று மகன்கள் உள்ளனர், இதில் நவ்தீப் சிங் தற்போது கனடாவிலும் மற்றும் மன்தீப் சட்டம் படித்து வருகிறார் என்றும் ,தீப் டெல்லியில் உள்ள விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.

தீப் சித்தப்பா பிதி சிங்கின்படி, குடும்பம் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளது, ஆனால் தீப்-ன் தந்தை லூதியானாவில் ஒரு வழக்கறிஞராக இருந்து, சுமார் மூன்று ஆண்டகளுக்கு முன்பு இறந்தார் என்றும் தெரிய வருகிறது.

தீப் பற்றி பேசிய பிதி சிங்,"சட்டம் படிக்க மகாராஷ்டிராவின் புனே நகருக்கு சென்று, பின்னர் மும்பையில் குடியேறினார், அங்கு சட்டப் பணியில் ஈடுபட்டார் . " என்றார்.

தீப் பாலாஜி ஃபிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் வழக்கறிஞராக தொடக்கத்தில் பணியாற்றினார். அதன்பின் தியோல் குடும்பத்தாருடன் ஏற்பட்ட நெருக்கத்தால் திரையுலகில் நுழைந்தார். தீப்பிறகு திருமணம் ஆகி ஒரு மகள்கள் உள்ளார்கள்.

தியோல் குடும்பத்திற்கு நெருக்கமாக இருந்ததன் காரணமாக, குர்தாஸ்பூர் தொகுதியில் சன்னி தியோல் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டபோது, தீப் சித்து முழு ஆதரவு கொடுத்தார் என்று பிதிசிங் கூறினார். பிதிசிங் கருத்துப்படி, தீப் நல்ல முறையில் மும்பையில் குடியேறினார் .

செங்கோட்டையில் நடந்த இந்த சம்பவம் குறித்து, தமக்கு ஊடகங்கள் மூலமாகத்தான் தகவல் கிடைத்தது என்றும் பிதி சிங் கூறியுள்ளார்.

தீப் சித்துவின் சினிமா பயணம்

2017 இல், பாடலாசிரியர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் அமர்தீப் சிங் கில்லின் படம் 'ஜோரா 10 நம்பரியா’ என்ற பஞ்சாபி படத்தில், ஜோரா கதாபாத்திரம் மூலம் சித்து பஞ்சாபிகளுக்கு அறிமுகமானார் .

அதேநேரத்தில் அவர் பஞ்சாபி திரைப்பட த் துறையில் நுழைந்தார்.

மும்பையில் மாடலாக பல பேஷன் ஷோக்களில் கலந்து கொண்ட தீப், இறுதியாக மாடலிங்கிலிருந்து நடிகராக மாறத் தொடங்கினார்.

தியோல் குடும்பத்தின் சொந்த பேனர் விஜேயிதா பிலிம்ஸின் கீழ், தீப் தனது முதல் பஞ்சாபி படமான 'ராமதா ஜோகி' படத்தில் 2015-ல் கதாநாயகனாக பணியாற்றினார். சன்னி தியோலின் பல படங்களை இயக்கிய குட் டு தனோவா இப்படத்தை இயக்கியுள்ளார். ஆனால், இந்த படம் தீப்பிற்கு பெரிய புகழை தரவில்லை.

2017-ல் 'ஜோரா 10 நம்பரியா' படத்திற்குப் பிறகு தீப் சித்துவின் 'ரங் பஞ்சாப்' என்ற மற்றொரு படம் 2018-ல் வந்தது. இப்படத்தை ராகேஷ் மேத்தா இயக்கினார்.

பின்னர், 2019 ஆம் ஆண்டில், மூத்த பஞ்சாபி நடிகர் குகு கில் லுடன் 'சாடே ஆலே' என்ற படத்தில் தோன்றினார்.

2020ஆம் ஆண்டு அமர்தீப்சிங் கில் இயக்கத்தில்,ஜோரா படத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது, 'ஜோரா, செகண்ட் சாப்டர் ரிலீஸ்’ ஆனது. இதில் முன்பு போலவே, தரமேந்திரா, தீப் சித்துவுடன் இருந்தார், அதுதவிர முக்கிய பஞ்சாபி நடிகர் குகு கில் -ம் இருந்தார் .

ஜோரா என்ற இரண்டு படங்களிலும், தீப் சித்து, இது வரை தாதா வேடத்தில் நடித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+