Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேதி ரெடி! 2024 ஜனவரியில் அயோத்தி ராமர் கோவிலை திறக்கும் பிரதமர் மோடி! தரிசனத்துக்கு தயாரா?

Subscribe to Oneindia Tamil

அயோத்தி: அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவிலை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக திறக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் தான் ராமர் கோவிலை பிரதமர் மோடி திறந்து வைக்கும் தேதி குறித்த முக்கிய விபரம் வெளியாகி உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக நீண்ட நாட்களாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. கடந்த 2019 ம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ம் தேதி அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு அந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்தது.

What is the date of PM Modi likely to inaugurate Ayodhya Ram Temple on 2024 january?

இதையடுத்து அயோத்தியில் 2.7 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணி கடந்த 2020ம் ஆண்டு தொடங்கியது. இதற்காக 2020 பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி ராமர் கோவில் கட்டுவதற்காக ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளையை உருவாக்கினார்.

அதன்பிறகு 2020 ஆகஸ்ட் 5ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தற்போது ரூ.1000 கோடி செலவில் பிரமாண்டமாக கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதில் 5 ஏக்கர் பரப்பளவில் அயோத்தி ராமர் கோவில் அமைய உள்ளது. கோவில் பீடத்தின் மீது மூன்று அடுக்குகளாக ராமர் கோவில் அமைய உள்ளது. கோவிலின் பீடம் கிரானைட் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் கோவிலில் 5 மண்டபங்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த மண்டபங்களின் மேற்கூரைகள் கூம்பு வடிவில் உயரமாக அமைக்கப்பட்டு இருக்கும். மிக உயரமான சிகரம் என்பது கர்ப்பகிரஹத்திற்கு மேல் இருக்கும். மேலும் சிவன் அவதாரங்கள், சரஸ்வதி தேவியின் அவதாரங்கள் உள்ளிட்டவை கோவிலில் இடம்பெற உள்ளது.

மிகவும் கலைநுட்பத்துடன் சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட தூண்கள், கற்கள், இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து காணிக்கையாக பெறப்பட்ட செங்கற்கள் பயன்படுத்தி கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இதுதவிர ராமர் கோவிலை சுற்றி 100 ஏக்கர் பரப்பளவில் நூலகம், அருங்காட்சியகம், தியான மண்டபம், காப்பகம், உணவு சாப்பிடும் இடம் உள்பட பிற கட்டடங்கள் அமைய உள்ளன.

2024ம் ஆண்டுக்குள் இந்த பணிகளை முடித்து பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அயோத்தி ராமர் கோவிலை பிரதமர் மோடி திறந்து வைக்கும் தேதி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி 2024 ஜனவரி மாதம் 21 முதல் 24 ம் தேதிக்குள் பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோவிலை திறந்து வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

What is the date of PM Modi likely to inaugurate Ayodhya Ram Temple on 2024 january?

இந்த 4 நாட்கள் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதில் ஒன்றை பிரதமர் மோடி தேர்வு செய்து ராமர் கோவிலை திறந்து வைக்க உள்ளார். இதுபற்றி ராமர் கோவில் கட்டும் அறக்கட்டளையான ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேத்ரா சார்பில் கூறும்போது, ‛‛அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா என்பது ஜனவரி மாதம் 3வது வாரத்தில் நடக்கும். தேதியை மட்டும் பிரதமர் மோடி இறுதி செய்ய உள்ளார். மேலும் திறப்பு விழாவுக்கான பூஜைகள் என்து 2024 ஜனவரி மாதம் 14ம் தேதியே தொடங்கும்'' என கூறப்பட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க சில நாட்களுக்கு முன்பு அயோத்தி ராமர் கோவிலில் அமைய இருக்கும் அருங்காட்சியகம் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினர். இதில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது அருங்காட்சியகம் குறித்த விளக்கப்படம் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+