• search

இனி பாகிஸ்தான் போக சொன்னா போயிடுங்க பாஸ்.. அங்க பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா?

FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    டெல்லி: பெட்ரோல், டீசலின் விலை இந்தியாவில் அதிகமாக உள்ளது. ஆனால் பாகிஸ்தான் உள்ளிட்ட மற்ற ஆசிய நாடுகளில் இந்த விலை மிகவும் குறைவாகவே உள்ளது.

    இந்தியாவில் பல மாநிலங்களில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.97ஆகும். டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.25 ஆகும். இந்த விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

    ஆனால் ஆசியாவில் மற்ற நாடுகளில் பெட்ரோல் விலை மிகவும் குறைவாகவே உள்ளது. முக்கியமாக, பாகிஸ்தானில் பெட்ரோல் விலை மிக மிக குறைவாகவே உள்ளது.

    சீனாவில் எவ்வளவு

    சீனாவில் எவ்வளவு

    சீனாவில் கிட்டத்தட்ட இந்தியா அளவிற்குத்தான் பெட்ரோல் விலை விற்கிறது. சீனாவில் பெட்ரோல் விலை இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் 79.60க்கு விற்கிறது. அங்கும் வரிநிறைய விதிக்கப்படுவதால் இந்த அளவிற்கு விலை விற்கிறது.

    ஆசியாவில் குறைவு

    ஆசியாவில் குறைவு

    அண்டை நாடுகளில் பெட்ரோல் விலை மியான்மரில்தான் மிகவும் குறைவாக உள்ளது. அங்கு பெட்ரோல் விலை இந்திய ரூபாய் மதிப்பில் வெறும் 41.99 ரூபாய்தான். அங்கு வரிவிதிப்பு முறை மிக மிக குறைவு ஆகும். இதன் காரணமாகவே அங்கு விலையும் குறைவாக உள்ளது.

    பாகிஸ்தானில் எவ்வளவு

    பாகிஸ்தானில் எவ்வளவு

    நேற்றைய டாலர் மதிப்பை வைத்து பார்க்கையில் பாகிஸ்தானில் பெட்ரோல் விலை இந்தியாவை விட குறைவாகவே உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் பார்த்தால் பாகிஸ்தானில் பெட்ரோல் விலை வெறும் 54.33 ரூபாய் மட்டுமே. பாகிஸ்தானை விட இந்தியாவில் மோசமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    மற்ற அண்டை நாடுகள்

    மற்ற அண்டை நாடுகள்

    அதேபோல் மற்ற அண்டை நாடுகளிலும் பெட்ரோல் விலை குறைவாகவே உள்ளது. ஆசியாவில் இந்தியாவில் தான் மோசமாக பெட்ரோல் விலை விற்கிறது. பூட்டானில் பெட்ரோல் விலை இந்திய மதிப்பில் 63.71 ரூபாய். நேபாளில் பெட்ரோல் விலை இந்திய மதிப்பில் 69.55 ரூபாய், இலங்கையில் பெட்ரோல் விலை இந்திய மதிப்பில் 70.99 ரூபாய் விற்கிறது.

    திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

    English summary
    The Petrol price in Pakistan is less compared to India, amidst a hike in fuel prices in our country.

    நாள் முழுவதும் oneindia
    செய்திகளை உடனுக்குடன் பெற

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more