ககன்யான் சோதனை! கடைசி நேரத்தில் சிக்கல்!ஒரே மணி நேரத்தில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்! மாஸ் காட்டிய இஸ்ரோ

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீஹரிகோட்டா: ககன்யான் திட்டத்தின் சோதனை திட்டம் கடைசி நொடிகளில் ரத்து செய்யப்பட்டது. பிறகு மீண்டும் 10 மணிக்கு இது வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது. இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்பது குறித்துப் பார்க்கலாம்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ கடந்த சில ஆண்டுகளில் விண்வெளி சார்ந்து பல முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. மற்ற நாடுகள் பல ஆயிரம் கோடி செலவழித்தும் திணறும் திட்டங்களைக் கூட இஸ்ரோ ஈஸியாக நிறைவேற்றி வருகிறது.

 What is the reason as Gaganyaan Test Flight Delayed Launch

இதனால் இஸ்ரோவின் ஆய்வுகள் எப்போதும் சர்வதேச அளவில் கவனம் பெற்றதாகவே இருக்கும். மேலும், உலக நாடுகளும் இதன் காரணமாகவே தங்கள் சாட்டிலைட்களை அனுப்ப இந்தியாவைத் தேடி வருகிறது.

இஸ்ரோ: அதற்குச் சந்திரயான் 3 திட்டத்தை ஒரு உதாரணமாகச் சொல்லலாம். நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய முதல் சாட்டிலைட் என்ற சிறப்பையும் சந்திரயான் 3 பெற்றது. அதிலும் மற்ற நாடுகள் நிலவுக்கு அனுப்பும் ஏவுகணைக்கு ஆகும் செலவில் வெறும் ஒரு பகுதியில் இஸ்ரோ இந்த ஒட்டுமொத்த திட்டத்தையும் முடித்துவிட்டது. இப்படிப் பல சிக்கலான விண்வெளி திட்டங்களை இஸ்ரோ கில்லியாக நிறைவேற்றி வருகிறது.

இதற்கிடையே இஸ்ரோ இப்போது அடுத்தகட்ட திட்டத்திற்கு ரெடியாகி வருகிறது. சந்திரயான் 3க்கு அடுத்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மீது தான் இஸ்ரோவின் முழு கவனமும் இருக்கிறது. சாதாரண சாட்டிலைட்களை விண்ணுக்கு அனுப்புவதைக் காட்டிலும் இது பல மடங்கு சிக்கலான விஷயமாகும். விண்வெளி வீரர்கள் செல்ல ஏதுவாக சாட்டிலைட்கள் இருக்க வேண்டும். மேலும், அவர்களுக்குத் தனியாகவும் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

ககன்யான்: தற்போது வரை உலகளவில் பார்க்கும் போது அமெரிக்கா, ரஷ்யா, சீன நாடுகள் மட்டுமே வெற்றிகரமாக மனிதர்களை விண்ணுக்கு அனுப்பியுள்ளது. இந்த வரிசையில் இந்தியாவும் நிச்சயம் இணையப் போகிறது. இதற்காகவே ககன்யான் திட்டத்தை இப்போது இஸ்ரோ கையில் எடுத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் இஸ்ரோவின் வலிமையான ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி. மார்க் - 3 ராக்கெட் மூலம் பூமியின் தாழ் வட்டப்பாதைக்கு விண்வெளி வீரர்கள் சென்று திரும்புவார்கள்.

இதற்கிடையே ககன்யான் திட்டத்தின் முக்கியமான சோதனை இன்று நடக்க இருந்தது. இதில் விண்வெளி வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் க்ரூ மாட்யூல் மற்றும் க்ரூ எஸ்கேப் சிஸ்டம் சோதிக்கப்பட இருந்தது. ககன்யான் பயணத்தில் இந்திய விண்வெளி வீரர்களை மீண்டும் பூமிக்குப் பாதுகாப்பாக அழைத்து வர இந்த அமைப்புகள் அத்தியாவசியமாகும். பூமியில் இருந்து 17 கிமீ மேலே சென்ற பிறகு அந்த க்ரூ மாட்யூல் மட்டும் தனியாகப் பிரியும். அங்கிருந்து இதைப் பாதுகாப்பாகத் தரையிறங்க வைப்பதே இந்த சோதனையாகும்.

ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்: க்ரூ மாட்யூல் மட்டும் தனியாகப் பிரிந்து வங்கக்கடலில் விழும். 2 கிமீ உயரத்தில் இருக்கும் போது பாராசூட் விரிந்து உள்ளே இருக்கும் நபர்களைப் பாதுகாக்கும். முதலில் இந்தத் திட்டம் காலை 8 மணிக்கு டெஸ்டிங் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான கவுட் டவுனும் ஆரம்பித்தது. இருப்பினும், மோசமான வானிலை என்று கூறி 8.30, 8.45 மற்றும் 9 மணி என மூன்று முறை இந்த சோதனை தள்ளி வைக்கப்பட்டது.

இறுதியில் சோதனைக்கு ஐந்து நொடிகள் மட்டுமே இருந்த போது சோதனை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதை இஸ்ரோ தலைவர் சோம்நாத் உறுதி செய்தார். இதற்கு மோசமான வானிலை காரணம் எனச் சொல்லப்பட்டாலும் இதற்கு வேறு காரணங்களும் இருக்கிறது. அதையும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தனது பேச்சில் குறிப்பிட்டிருந்தார். அதாவது விண்கலத்தின் இன்ஜினில் என்ன கோளாறு ஏற்பட்டுள்ளதை என்பதைக் கண்டறிய வேண்டும் என சோம்நாத் கூறியிருந்தார்.

என்ன காரணம்: அவர் மேலும் கூறுகையில், "விண்கலனை ஏவும் கட்டளையைப் பிறப்பிக்கும் ALS- தானியங்கி லான்ச் சீக்வன்ஸ் நார்மலாகவே இருந்தது. இருப்பினும் என்ஜின் வழக்கமான முறையில் ஸ்டார்ட் ஆகவில்லை. என்ன தவறு நடந்தது என்பதை நாங்கள் கண்டுபிடிப்போம். இப்போது விண்கலன் பாதுகாப்பாக உள்ளது. என்ஜினில் என்ன கோளாறு ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். விண்கலனை புறப்பட விடாமல் ALS தடுத்தது ஏன் என்று விரைவில் கண்டறிவோம்" என்றார்.

அதன்படி ALSஇல் என்ன பிரச்சினை என்பது கண்டறிந்து 10 மணிக்கு ககன்யான் வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது. குறுகிய நேரத்தில் பிரச்சினையைக் கண்டறிந்து சரி செய்த விஞ்ஞானிகளைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+