திடீரென நின்ற சிக்னல்.. விண்வெளியில் மாயமான 16 சாட்டிலைட்கள்? இஸ்ரோ ராக்கெட்டில் என்ன தான் பிரச்சனை?
ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோவின் PSLV-C62 ராக்கெட் இன்றைய தினம் 3வது ஸ்டேஜில் திடீரெனத் தோல்வி அடைந்தது. இஸ்ரோவுக்கு இது பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இந்தத் தோல்விக்கு என்ன காரணம்.. இந்த ராக்கெட்டில் இருந்து 16 ஏவுகணைகளுக்கு என்னவானது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையான இஸ்ரோ தொடர்ச்சியாகப் பல விண்வெளி மிஷன்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது. இதனால் உலகின் பல்வேறு நாடுகளும் கூட தங்கள் சாட்டிலைட்கள் விண்ணில் ஏவ இஸ்ரோவிடமே வருகிறது. அந்தளவுக்குச் சர்வதேச அளவில் ஒரு நம்பகமான விண்வெளி மையமாக இஸ்ரோ உருவெடுத்துள்ளது.

இஸ்ரோ
இதற்கிடையே இஸ்ரோ இன்றைய தினம் தனது பிஎஸ்எல்வி ராக்கெட்டை செலுத்தியது. பாதுகாப்பு, புவி கண்காணிப்பு உட்பட 16 செயற்கைக்கோள்களுடன் இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட், இன்று காலை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது. மொத்தம் 4 கட்டங்கள் கொண்ட இந்த மிஷனில் மூன்றாவது கட்டத்தில் மிஷன் தோல்வியடைந்துள்ளது.
காலை 10:17 மணிக்கு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. முதல் இரண்டு நிலைகளும் திட்டமிட்டபடி வெற்றிகரமாகச் செயல்பட்டன. இதனால் இந்த மிஷன் வெற்றிகரமாக முடியும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், கடைசி நேரத்தில் மூன்றாவது ஸ்டேஜ்ஜில் சிக்கல் ஏற்பட்டது. மூன்றாவது ஸ்டேஜ் இயக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே சிக்கல்கள் ஆரம்பமானது .
என்ன பிரச்சனை
இஸ்ரோ தலைவர் வி. நாராயணன், ஏவுகணையின் சுழற்சி விகிதம் மாறியதாகத் தெரிவித்தார். மேலும், திட்டமிட்ட பாதையிலிருந்து ராக்கெட் விலகிச் சென்றதை கட்டுப்பாடு மையம் கண்டறிந்ததை உறுதிப்படுத்தினார். மூன்றாவது நிலையில் ராக்கெட் இயக்கப்பட்ட பிறகு அதிலிருந்து டேட்டா கிடைப்பது நின்றுபோனது. இதன் மூலம் சுற்றுப்பாதை இணைப்பில் தோல்வி ஏற்பட்டது உறுதியானது.
ராக்கெட்டில் என்ன சிக்கல் ஏற்பட்டது.. தோல்விக்கு என்ன காரணம் என்பதை விசாரிக்க சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. திட எரிபொருள் மோட்டார் நம்பகத்தன்மை, முனைப்பகுதி ஆகியவற்றில் சிக்கல் ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. முன்பு சேம்பர் அழுத்தக் குறைவால் PSLV-C61 தோல்வி அடைந்திருந்த நிலையில், அதேபோன்ற பிரச்சனையாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
என்னவாகும்
இந்த ராக்கெட்டில் மொத்தம் 16 சாட்டிலைட்கள் இணைக்கப்பட்டிருந்தது. கடற்படை கண்காணிப்புக்கான முதன்மை செயற்கைக்கோள் EOS-N1 (அன்வேஷா), தனியார் ஆய்வுக் கருவிகள் உட்பட 16 சாட்டிலைட்கள் இருந்த நிலையில், அவை அனைத்துமே கண்ட்ரோலில் இல்லாமல் போய்விட்டன. அவை விண்வெளியில் தொலைந்திருக்கலாம் அல்லது வளிமண்டலத்தில் எரிந்திருக்கலாம் என்றே ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
அடுத்து என்ன
மொத்தம் 16 சாட்டிலைட்கள் அனுப்பப்பட்ட நிலையில், அதில் இந்த அன்வேஷா சாட்டிலைட் முக்கியமானது. அதில் இருக்கும் 'ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங்' தொழில்நுட்பம், நிலப்பரப்பில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் அல்லது ராணுவ நடமாட்டத்தைத் துல்லியமாகக் கண்காணிக்க உதவும். இதன் காரணமாகவே இன்றைய ராக்கெட் லான்ச் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. இருப்பினும், அது எதிர்பாராத விதமாகத் தோல்வியில் முடிந்தது.
தோல்விக்கான முதற்கட்டக் காரணங்கள் வெளியானாலும் கூட என்ன காரணம் என்பதைத் துல்லியமாகக் கண்டறியக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு அளிக்கும் பரிந்துரைக்கு ஏற்ப ராக்கெட்டில் மாற்றங்கள் செய்யப்படும் என்றே தெரிகிறது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications